இன்று காலை முதல் ட்விட்டரில் திமுக தலைவர் விஜய் என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.


இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


இதனிடையே வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு திமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இன்று காலை முதல் ட்விட்டரில் திமுக தலைவர் விஜய்’ என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி உள்ளது.


தற்போதைய நிலையில் திமுகவை காப்பாற்ற, திமுகவை ஆட்சியில் அமர்த்த விஜய்யால் மட்டுமே முடியும் என்றும் விஜய்யை திமுக தலைவராக முக ஸ்டாலின் அமர்த்தினால் கண்டிப்பாக திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.


#திமுக_தலைவர்_விஜய் இந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


திமுக தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டு ஒரே ஒரு முறை அவரை சுற்றுப்பயணம் செய்து வரச் சொன்னால் போதும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்றும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்