பெல்ஜியம் வந்த ஆப்கான் சிறுமியின் வைரல் போட்டொ: துள்ளிக்குதிக்க வைக்கும் சுதந்திரம்
ஆப்கானிலிருந்து தப்பித்து அகதிகளாக பெல்ஜியம் சென்ற ஒரு ஆப்கான் குடும்பத்தின் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அச்சத்தையும் பீதியையும் உண்டுபண்ணும் பல புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இதற்கிடையில், மனதில் மகிழ்ச்சியையும் உதட்டில் புன்னகையையும் கொண்டு வரும் ஒரு புகைப்படம் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.
மீட்கப்பட்ட ஒரு ஆப்கான் குடும்பத்தின் நிம்மதியை நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் இணையத்தில் ண்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் ஆப்கான் குடும்பம் ஒன்று, ஒரு விமான நிலையத்தில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. அந்த குடும்பத்தின் சிறிய பெண், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நிம்மதியாக குதித்துக் கொண்டு செல்வதையும் இதில் காண முடிகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூல் (Kabul) விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளிவந்த அச்சத்தை அதிகரிக்கும் பல படங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, இந்த குடும்பத்தின் புகைப்படம், நம்பிக்கையூட்டும் ஒரு படமாக உள்ளது.
இதயத்தை உருக்கும் இந்த படத்தை, முன்னாள் பெல்ஜிய பிரதமர் கை வெர்ஹோஃப்ஸ்டாட் ட்விட்டரில் பகிர்ந்து, அந்த ஆப்கான் (Afghanistan) குடும்பத்தை பெல்ஜியத்திற்கு வரவேற்றார்.
"நீங்கள் அகதிகளைக் காப்பாற்றினால் இப்படிதான் நடக்கும் ... சிறு பெண்ணே, பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்!" என்று அவர் எழுதியுள்ளார். மேலும் இந்த அற்புதமாக புகைப்படத்துக்காக அவர் ராய்ட்டர்சை பாராட்டியுள்ளார்.
ALSO READ: காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!
இந்த இடுகைக்கு இணையவாசிகள் எவ்வாறு பதிலளித்தனர் என்று இங்கு காணலாம்:
இந்த புகைப்படம் (Viral Photo) வெளியிடப்பட்டதிலிருந்து 3000 ரீ-ட்வீட்களையும் 24.5k -க்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் கொடூரமான சூழல் மற்றும் அங்கிருந்து வெளிவரும் அச்சத்தை உண்டுபண்ணும் காட்சிகளுக்கு மத்தியில், இந்த புகைப்படம் சிறிது நம்பிக்கையை அளித்துள்ளது.
ALSO READ: Kabul Airport Blast: காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; ISIS பொறுப்பேற்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR