வயது பக்கெட் சவாலைத் தொடங்கிய ஆனந்த் மஹிந்திராவை நெகிழச் செய்த வீடியோ
ஆனந்த் மஹிந்திரா, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது இப்போது `ஏஜ் பக்கெட் சவாலுக்கு` வழிவகுத்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா, ‘5 தலைமுறைகள் ஒன்றாக இருப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
புதுடெல்லி: ஆனந்த் மஹிந்திரா, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது இப்போது 'ஏஜ் பக்கெட் சவாலுக்கு' வழிவகுத்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா, ‘5 தலைமுறைகள் ஒன்றாக இருப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் ஊக்கமளிக்கும், சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான ட்வீட்களின் பொக்கிஷமாகும்.
சமீபத்தில், ஆனந்த் மஹிந்திரா, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் வீடியோ பகிர்ந்துள்ளார், மனதைக் கவரும் இந்த வீடியோ இப்போது ‘ஏஜ் பக்கெட் சவாலுக்கு’ வழிவகுத்துள்ளது.
ஆசியாவை சேர்ந்த ஆரோக்கியமான குடும்பத்தின் வீடியோ இது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 5 தலைமுறைகள் கொண்ட குடும்பத்தின் வீடியோ இது.
8 முதல் 88 வயது வரை
சிறுவன் ஒருவன் முதலில் வீடியோவில் தோன்றுகிறார். அந்த சிறுவன், தனது தந்தையை அழைக்கிறார், அப்பா வந்து நின்ற பிறகு அவர் தனது தந்தையை அழைக்கிறார், அவர் தனது தந்தையை அழைக்கிறார்.
இப்படி நான்கு மகன்கள் தங்கள் அப்பாவை அழைக்கும்போது, அவர்கள் நடந்து வந்து வரிசையாக நிற்கிறார்கள். ஐந்து ஆண்கள் வரிசையாக நிற்கும்போது, வயதில் மிகவும் குறைவான சிறுவன் ஒரு உயரமான மேஜையில் நின்று தனது முன்னோர்களுக்கு இணையாக நிற்கிறான்.
ஐந்து தலைமுறையினர் ஒரே வரிசையில் நிற்பதையும், அதை பார்த்து குடும்பத்தினர் ஆரவாரம் செய்வதையும் கேட்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்ட மஹிந்திரா குழுமத் தலைவர் மஹிந்திரா பிரமித்து போனதாக கூறுகிறார்.
மேலும் படிக்க | ரூட்ல கிராஸ் பண்ணறீங்க; எச்சரிக்கும் யானையின் வைரல் வீடியோ
“என்ன ஒரு ஆசீர்வாதம்! 5 தலைமுறைகள் ஒன்றாக இருப்பதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகெங்கிலும் எத்தனை குடும்பங்களுக்கு 5 தலைமுறைகள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வீடியோ ‘ஏஜ் பக்கெட் சேலஞ்ச்’ என்ற பெயரில் வைரலாகிறது.
மஹிந்திரா தனது ட்வீட் மூலம் இந்தியர்களுக்கு ‘வயது பக்கெட் சவாலை’ விடுத்துள்ளார். "இந்தியாவில் இருந்து இதே போன்ற வீடியோவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
சவாலை ஏற்ற சுதேஷ் எஸ். என்பவர், தனது குடும்பத்தில் ஐந்து தலைமுறைகள் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.
ஒரு கைக்குழந்தை தனது பெற்றோர், தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா மற்றும் கொள்ளு தாத்தா பாட்டி என இருக்கும் அந்த சவால் புகைப்படம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு சந்தீப் மால், ஐந்து தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழ்வதை உறுதிப்படுத்தினார்.
ஐயா எப்பவாவது வீட்டுக்கு வந்து, எங்கள் வீட்டில் ஐந்து தலைமுறைகளுடன் சாப்பாடு சாப்பிட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR