லண்டன்: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் 2020 ஆம் ஆண்டின் உலகளாவிய ஆசிரியர் பரிசின் (Global Teacher Prize 2020) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கல்வியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதத்தில் இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையின் மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 7,37,85,000 ரூபாய் ஆகும். ஆம், 7 கோடிக்கும் மேல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் (Maharashtra) சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ரஞ்சித்சிங் டிசாலே. ஆசிரியர் பணியில் மிக உன்னதமான சேவையைப் புரிந்த ஆசிரியர்களை கௌரவிக்க 2014 ஆம் ஆண்டில் வர்கி அறக்கட்டளை நிறுவிய வருடாந்தர பரிசுக்காக உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இறுதிப் போட்டியாளர்களில் ரஞ்சித் வெற்றி பெற்றார்.


அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தைப் பாருங்கள்:



ஆசிரியர்கள் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்று நம்புகிற டிஸேல், தனது பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை தனது சக இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்தார்.


இந்த வெற்றிக்குப் பின்னர் அவர், "COVID-19 தொற்றுநோய் கல்வியையும் அது சேவை செய்யும் சமூகங்களையும் பல வழிகளில் மாற்றியுள்ளது. ஆனால் இந்த கடினமான நேரத்தில், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நல்ல கல்வி என்னும் பிறப்புரிமையை கிடக்கவைக்க தங்கள் மிகச் சிறந்த முயற்சியை வழங்குகிறார்கள்” என்றார்.


ஆசிரியர்கள் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள். அவர்கள் பல சவால்களுக்கிடையில் மாணவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். ஆசிரியர் சமூகம் மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் பகிர்வதிலும் நம்பிக்கை கொண்டுள்ள சமூகமாகும். எனவே, பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை எனது சக இறுதிப் போட்டியாளர்களிடையே சமமாகப் பகிர்ந்துகொள்வேன் என்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பகிர்வு வளர்ந்து வருவதால், இந்த உலகத்தை நாம் மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


அவரது தாராள மனதின் காரணமாக மற்ற ஒன்பது இறுதிப் போட்டியாளர்கள் தலா 55,000 அமெரிக்க டாலர்களைப் பெறுவார்கள். தனது பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொண்ட முதல் வெற்றியாளர் என்ற சாதனையையும் அவர் பெற்று விட்டார்.


அவரை வெற்றியாளராக்கிய அவரது பணிகள்


2009 ஆம் ஆண்டில் சோலாப்பூரில் உள்ள பரிதேவடியில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளிக்கு டிசேல் வந்தபோது, ​​அது ஒரு பாழடைந்த கட்டிடமாக இருந்தது. பள்ளி ஒரு மாட்டுக் கொட்டகைக்கும் ஒரு கிடங்கிற்கும் இடையில் மோசமான நிலையில் இருந்தது.



ALSO READ: யார் இந்த கீதாஞ்சலி ராவ்? TIME Magazine-ன் கவர் பேஜில் இவர் வரக் காரணம் என்ன?


மாணவர்களுக்கு உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான பணியை அவர் மேற்கொண்டார். மேலும் வகுப்பு பாடப்புத்தகங்களை மாணவர்களின் தாய்மொழியில் எழுதிக்கொடுத்தார். அவற்றில் தனித்துவமான QR குறியீடுகளை (QR Code) உட்புகுத்தி மாணவர்கள் ஆடியோ கவிதைகள், வீடியோ விரிவுரைகள், கதைகள் மற்றும் பாடப் பணிகளைப் பெறுவதை ஏதுவாக்கினார். அவர் தனது வீட்டில் கட்டிய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டி அதன் மூலம் அறியப்பட்டவர்.


அவரது தலையீடுகளின் தாக்கம் என்னவென்றால், இப்போது அந்த கிராமத்தில் பதின்வயது திருமணங்கள் எதுவும் நடப்பதில்லை. பள்ளியில் பெண் குழந்தைகளின் வருகை 100 சதவீதம் ஆகியுள்ளது.


ALSO READ: Online hearing-ல் ஷர்ட் இல்லாமல் திரையில் தோன்றிய lawyer: கண்டித்த SC நீதிபதிகள்


மைக்ரோசாஃப்ட் (Microsoft) கல்வியாளர் சமூக தளத்தைப் பயன்படுத்தி, அவர் தனது வார இறுதி நாட்களில் உலகெங்கிலும் மிகக் குறைந்த வளங்கள் மற்றும் வசதிகளுடைய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை மெய்நிகர் களப் பயணங்களில் அழைத்துச் செல்கிறார்.


மிக உன்னதமான ஆசிரியர் பணியை மிக அதிக உன்னதமான முறையில் செய்துகொண்டிருக்கும் இந்த ஆசிரியர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறார். இணையவாசிகள் அவரை வியந்து புகழ்ந்து வருகிறார்கள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.