வைரல் வீடியோ: குளிர் காலம் என்பது மிகவும் ஜாலியாக ரசிக்க வேண்டிய சீசன் எனலாம். இயற்கையும் இதனை ஒத்துக் கொண்டது போல் தெரிகிறது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு நிலவும் அதிக குளிர் காரணமாக, 247‌ வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். வானில் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்த பிறகு, நாட்டின் பல பகுதிகளுக்கு ஏராளமான புலம்பெயர்ந்த பறவைகள் குவிவதைக் காணும் மாதம் டிசம்பர். சமீபத்தில், தமிழகத்தின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, பூ நாரை பறவிகள் கூட்டம், நீர்நிலையில் தாவி பறந்து மகிழ்ச்சியாக இருக்கும் அரிய காட்சி நிறைந்த ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தில் இந்த அழகான வீடியோ படமாக்கப்பட்டது. நீர்நிலையில் விழும் சூரியக் கதிர்களால் தங்க நிறத்தில் ஜொலிக்கும் இயற்கையின் பல அதிசயங்களையும் அழகையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. சுப்ரியா சாஹு வீடியோவைப் பகிர்ந்து கொண்டு "தமிழ்நாட்டில் உள்ள மாயாஜால கோடியக்கரை பறவைகள் சரணாலயம் புலம்பெயர்ந்த பறவைகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. முத்துப்பேட்டை சதுப்புநிலப் பகுதிக்கு ஏற்கனவே 50,000க்கும் மேற்பட்ட பூ நாரைகள் வந்துள்ளன. உண்மையில் மெய்சிலிர்க்கவைக்கும் காட்சி இது"


மேலும் படிக்க | Viral Video: மிரட்டும் எலி... அஞ்சி நடுங்கும் பூனை... இது தான் ரியல் Tom & Jerry!


கண்கவர் வீடியோவை இங்கே காணலாம்: 


 



 


இந்த வீடியோ இதுவரை 1200க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு ட்விட்டர் பயனர் ஆச்சரியத்தையும் வியப்படுத்தி, "என்ன அழகு. என்ன ஒரு அருமை. இந்த அழகான கிரகத்தில் நாம் அவர்களுடன் இருக்கிறோமா என்று சில சமயங்களில் வியப்பு மேலிடுகிறது" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் இது சுற்றுலாவை மேம்படுத்தும் என்று கூறினார், மற்றொரு பயனர், பறவைகள் கம்பீரமாக பறப்பதைப் பார்ப்பது "இதயத்தைத் தூண்டும்" காட்சி என பதிவிட்டுள்ளார்.


பெயருக்கு ஏற்ப, ஃபிளமிங்கோ எனப்படு பூ நாரைகள் அவற்றின் சுடர் போன்ற ஜொலிக்கும் நிறத்திற்கு புகழ் பெற்றவை. ஆறு இனங்களில், நான்கு ஃபிளமிங்கோ இனங்கள் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளன (இதில் கரீபியன் அடங்கும்) மற்றும் இரண்டு இனங்கள் ஆப்ரோ-யூரேசியாவைச் சேர்ந்தவை.


மேலும் படிக்க | Viral Video: நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் வாத்து!


மேலும் படிக்க | Viral Video: கூட்டு களவாணிகள் என்றால் இவர்கள் தானோ... சிறுமியை அலர்ட் செய்யும் நாய்!


மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ