வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் தினமும் விலங்குகளின் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் அமைதியான மற்றும் ஆக்ரோஷமான விலங்குகள் என அனைத்து வகையான விலங்குகள் பற்றிய வீடியோக்களையும் காண முடியும். மிகவும் சாதுவான விலங்குகளில் பசுவின் பெயர் முதலில் வருகிறது. பசுவிற்கு கோவம் வருவதை மிக அரிதாகவே நம்மால் காண முடியும். 


ஆனால், பசுவிற்கு கோவம் வந்தாலோ, அல்லது காரணமே இல்லாமல் அதை யாராவது சீண்டினாலோ, துன்புறுத்தினாலோ அது ஆக்ரோஷமாக மாறி தாக்கத் துவங்குகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் இதுபோன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு நபர் அமைதியாக இருந்த பசுவை வம்பிழுத்து பெரும் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். பசுவை என்ன செய்தாலும் அது அமைதியாக இருக்கும் என அவர் நினைத்தார் போலும். ஆனால் அவரது இந்த தவறான புரிதலை பசு மாற்றியது. 


மேலும் படிக்க | ரயில் வரும்போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்து நின்ற யானையின் திக் திக் நிமிட வைரல் வீடியோ


பசுவை அடக்க முயலும் நபர்


வைரலான வீடியோவில், பசுவை ஒருவர் கட்டுப்படுத்த முயல்வதைக் காண முடிகின்றது. ஆனால் பசு அதற்கு ஒத்துழைகக்வில்லை. பசு தன் பேச்சை கேட்காததால் அந்த நபர் பசுவின் வாலை பிடித்துக்கொண்டு அதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். இதனால் பசு கடும் கோவம் கொள்கிறது. அது வேறு திட்டம் தீட்டுகிறது. பசு திடீரென தனது வாலை விடுவித்து கோவத்துடன் அந்த நபரின் பின்னால் ஓடியது.


கோபமடைந்த பசு பாடம் கற்பித்தது


பசுமாடு திருப்பி அடித்தவுடன், அங்கிருந்தவர்களும் அந்த நபரும் அச்சத்தின் உச்சிக்கே செல்கிறார்கள். பசு முதலில் அந்த நபரை கீழே தள்ளுகிறது. பின்னர் கொம்புகளால் அவரை தாக்குகிறது. அந்த நபர் தன்னை காப்பாற்றிக்கொள்ள பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் கோபம் கொண்ட பசு அவரை எளிதில் விடுவதாக இல்லை. அந்த நபர் ஓட முற்படும்போது, அவரை இழுத்துச் சென்று தன் உடம்பின் மொத்த பாரத்தையும் அவர் மீது ஏற்றி அவரைக் கீறியது. இச்சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறினர். பசுவின் கோபத்தைக் கண்டு அந்த நபரைக் காப்பாற்ற யாருக்கும் தைரியம் வரவில்லை.


மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் @ExtremeFaiIs என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது. இதற்கு இது வரை 13 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்துள்ளன. இனையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பயனர்கள் பசுவின் செயலை சரி என்று கூறியுள்ளனர். ஒரு பயனர், 'விலங்குகளை எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது' என்று தெரிவித்துள்ளார். ‘தவறு அந்த நபருடையதுதான்’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 'மாடு மனிதனுக்கு நல்ல பாடத்தை புகட்டியது’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: கூடைப்பந்து சாம்பியன் கூட திணறுவாரு... அசால்டாக விளையாடும் நீர் நாய்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ