நீங்கள் PUBG பைத்தியமா? இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஸ்வீட் எடுங்க...
PUBG உள்ளிட்ட பல செயலிகளை தடை செய்வததன் பின்னணி காரணம் பயன்படுத்துபவர்களின் தரவு பாதுகாப்பு என்று கூறப்பட்டது. உண்மையில் இது மிகப்பெரிய காரணம். இந்த சிக்கலை தீர்ப்பதற்காக PUBG இப்போது தனது தரவு சேவையகத்தை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது.
PUBG உள்ளிட்ட பல செயலிகளை தடை செய்வததன் பின்னணி காரணம் பயன்படுத்துபவர்களின் தரவு பாதுகாப்பு என்று கூறப்பட்டது. உண்மையில் இது மிகப்பெரிய காரணம். இந்த சிக்கலை தீர்ப்பதற்காக PUBG இப்போது தனது தரவு சேவையகத்தை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது. அதாவது, இனிமேல் PUBG பயன்படுத்துபவர்களின் எந்த தரவும் நாட்டிலிருந்து வெளியேறாது. PUBG கார்ப்பரேஷன் இந்த உத்தியை பயன்படுத்தி, தனது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை தொடர்ந்து கொடுக்க முடியும். PUBG விளையாட்டு மீதான தடையை நீக்க முடியும்.
புதுடெல்லி: PUBG விளையாட்டின் மீது மோகம் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி... PUBG கார்ப்பரேஷன் தனது பிரபலமான விளையாட்டை மீண்டும் இந்தியாவில் தொடங்க தயாராகி வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படலாம். இந்தியா-சீனா எல்லை மோதலுக்குப் பிறகு, PUBG உட்பட 224 செயலிகள் (apps) தடை செய்யப்பட்டன. அக்டோபர் 30 முதல் இந்தியாவுக்கான சேவையகத்தை PUBG நிறுத்திவிட்டது.
அடுத்த மாதம் PUBG-இன் relaunch அறிவிக்கப்படலாம்
இந்தியாவில் மீண்டும் PUBG ஐ தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வலைத்தளமான டெலிகாம்டாக் (telecomtalk) கூறுகிறது. பிரபலமான PUBG விளையாட்டை இந்தியாவில் மீண்டும் தொடங்க உலகளாவிய கிளவுட் சேவை வழங்குநருடன் PUBG கார்ப்பரேஷன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதனால் தரவு தொடர்பான சிக்கல்களில் உறுதியான ஏற்பாடுகள் செய்ய முடியும். இதைத் தவிர, PUBG கார்ப்பரேஷனும் நாட்டின் சில internet streamer-களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் telecomtalk கூறுகிறது. அதன்படி, PUBG டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் தொடங்கப்படலாம்.
இனிமேல் PUBG பயன்படுத்துபவர்களின் எந்த தரவும் நாட்டிலிருந்து வெளியேறாது. PUBG கார்ப்பரேஷன் இந்த உத்தியை பயன்படுத்தி, தனது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை தொடர்ந்து கொடுக்க முடியும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR