பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததற்கு பின்னர் தற்போது அவருக்கு வில்லானாக அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இவர் ஹீரோவாக நடிப்பதை விட அதிகமாக வில்லனாகத்தான் நடித்துவருகிறார்.


இவரது நடிப்பில் தற்போது செக்க சிவந்த வானம் திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 



இந்நிலையில் தற்போது அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் சிக்ஸ் பேக் ஆப்ஸ் உடன் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது அடுத்த படம் பற்றிய அறிவிப்பிற்கான முயற்சி எனவும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மணிரத்னம் இயக்கியுள்ள இந்த செக்க சிவந்த வானம் திரைப்படத்திலும் இவர் வில்லானாக தான் நடித்துள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் இவரது அடுத்த படத்திலும் இவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.