ஆஷஸ் டெஸ்டில் விழுந்த இடி, கேமராவில் கைதான மின்னல்: ட்விட்டரில் மீம்ஸ் மழை
இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், இயற்கை இங்கிலாந்து அணிக்கு உதவ முடிவு செய்தது.
ஆஸ்திரேலியாவின் அடிலைட்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஒரு அசாதாரணமான நிகழ்வில், ஆஷஸ் டெஸ்ட் (Ashes Test) போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணிக்கு உதவ, வானில் உள்ள தேவர்களே உதவியது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய அணி தங்கள் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், இயற்கை இங்கிலாந்து அணிக்கு உதவ முடிவு செய்தது.
போட்டி நடைபெறும் போது அப்பகுதியில் திடீரென பயங்கர ஒலியுடன் இடி மின்னல் ஏற்பட்டது. இதனால், வீரர்களுக்கு இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டதோடு, அப்போது ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் பந்தை அடிக்காமல் விலகினார்.
இதைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இடி விழுந்த காட்சி ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி, அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஆஷஸ் போட்டியில் இடி விழுந்து, மின்னல் கேமராவில் பதிவான சம்பவம் இணைய வாசிகளிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல வித கருத்துகளும், மீம்களும் வந்த வண்ணம் உள்ளன.
ALSO READ | Cricket: ’மைதானத்தில் தூங்குகிறார் பட்லர்’ கடுமையாக சாடிய ஆஸி., ஜாம்பவான்
ALSO READ | Virat: கோலியின் சேட்டை..! ப்ளைட்டில் கடுப்பான இஷாந்த்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR