புதுடெல்லி: புதன் கிரகம் இன்று அதாவது நவம்பர் 21ம் தேதி விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளது. கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியனும், புதனும் ஒரே ராசியில் இருக்கும் போதெல்லாம், அவற்றின் கூட்டணி புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது. புதன் செல்வத்துக்கும், சூரியன் வெற்றிக்கும் காரணி. எனவே, இந்த இரண்டும் இணைந்திருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். புத ஆதித்ய யோகம் அவர்களுக்கு முன்னேற்றம், பணம் மற்றும் கௌரவம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. இன்று துவங்கும் புத்தாதித்ய யோகம் டிசம்பர் 10ம் தேதி வரை நீடித்து 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
புத - ஆதித்ய யோகம் பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும்
ரிஷபம் (Taurus): இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும் பண ரீதியாகவும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். இது தவிர இவர்களின் திருமண வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். உங்கள் துணையுடன் சந்தோஷமாக நேரம் செலவிடுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள்.
ALSO READ | Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!!
கடகம் (Cancer): கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வீட்டில் சுப காரியங்கள் நிறைவேறும். காதல் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் வரலாம்.
சிம்மம் (Leo): இந்த புத ஆதித்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வெற்றியைத் தரும். புதிய கார் வாங்கலாம். மொத்தத்தில், இந்த கால கட்டம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ALSO READ | இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்; இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை
துலாம் (Libra): துலாம் ராசிக்காரர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். விருப்பமான இடம் அல்லது திட்டத்திற்கு மாற்றலாம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். ஆனால் அது நன்மை தரும். பேசும்போது கவனமாக இருங்கள், கோபப்படுவதைத் தவிர்க்கவும்.
மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும், அது அவர்களின் செலவுகளை சமாளிக்க உதவும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எந்தவொரு வேலையையும் முடிக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | ஞாயிற்றுக்கிழமை ‘இந்த’ ராசிக்காரர்கள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR