புயலை பார்த்திருக்கலாம்! ஆனால் இப்படி பனிப்புயல் அவலாஞ்சியை பார்த்ததுண்டா? வைரல் வீடியோ!
Shocking Avalanche Video : நொடியில் மரணத்தில் இருந்து தப்பித்தால் எப்படி இருக்கும்? அச்சத்தை ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது...
Avalanche Video Trending : நம் கைக்குள் அடக்கமாகிவிட்ட மொபைல் நம்மோடு பின்னிப் பிணைந்து விட்டது என்றால், இண்டநெட் இணைப்பு சரியில்லாமல் இருந்தால் நாம் படும் பாடு இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத இந்த இணைய வசதி நமது வாழ்க்கையை எளிதாக்கிவிட்டது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. இன்று இணையம், செல்போன், ஸ்மார்ட்போன் இல்லாத உலகையே கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை.
வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு வித்தியாசமான பல செய்திகளை வழங்குகின்றன என்றால், பயனுள்ள தகவல்களுடன், கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள உதவுகிறது.
இருந்தாலும் சில நேரங்களில் அது கொடுக்கும் அதிர்ச்சியும் கவலையும் அதிகம் தான் என்றாலும், கத்தியை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் போலத் தான் எல்லாம் என்ற பதில் தான் வருகிறது. தற்போது இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்களே உண்டு. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வீடியோவாக இருந்தால் அதனை பார்த்து பார்த்து வைரலாக்குகின்றனர்.
பொதுவாக நாம் பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை இணையத்தில் வீடியோக்களாக பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகிறது. வைரலாகும் எல்லா வீடியோக்களுக்கும் உண்மையாவையா என்றால் அது கேள்விக்குறி தான்.
அப்படி ஒரு வீடியோ, பார்த்ததும் பயம் வந்தாலும், இயற்கையின் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை காட்டுகிறது.இந்த வீடியோ மலையேற்ற கேம்பில் எடுக்கப்பட்ட வீடியோ. மலையேற்றத்திற்காக செல்ல முகாமில் தங்கியிருப்பவர்கள் பனிப்புயல் வருவதை பார்த்ததும், அவற்றை படம் பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிதர்சனத்தை உணர்த்தும் இந்த வீடியோ நாம் பொதுவாக பார்க்கவே முடியாத இயற்கையின் பனிப்புயலின் சீற்றத்தையும் வேகத்தையும் காட்டுகிறது.
இந்த வீடியோ, மலையேற்றம் செல்லும் ஆர்வலர்கள் தங்கியிருந்த K2 அடிப்படை முகாமில் எடுக்கப்பட்டது. இது, பாகிஸ்தானின் கில்கிட் பால்டிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர் , இந்தியாவிற்கு இயற்கையான அரணாக திகழ்கிறது. வானமும் பூமியும் சந்திக்கும் உலகின் உச்சிக்கு உங்களை அழைத்துச் செல்லும். K2 உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய மலை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகம் இன்று நாம் அன்றாடம் உலா வரும் உலகமாக இருப்பதால், இதுபோன்ற வீடியோக்களை அதிகம் பார்க்க முடிகிறது. வியக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளவை வைரல் ஆகின்றன. வைரலாகும் வீடியோக்களை எடுத்தவர்கள் மட்டுமே அவற்றை நேரில் பார்த்தவர்கள் என்று சொல்லலாம்.
மேலும் படிக்க | இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ