இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!

Amazing Nature Videos Viral : இயற்கைக்கு மாற்று ஏதாவது உண்டா? அன்பு காதல், கோபம் சீற்றம் என எதுவாக இருந்தாலும் அனைத்து உணர்வுகளும் விலங்குகளின் உலகிலும் தென்படுவது அதிசயமாக தோன்றுகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2024, 09:14 PM IST
  • இயற்கைக்கு மாற்று உண்டா?
  • ஆச்சரியமூட்டும் விலங்குகளின் உலகம்
  • காணக்கிடைக்காத வைரல் வீடியோக்கள்
இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே! title=

வைரல் வீடியோக்கள்: சமூக ஊடகம் இன்று தனி உலகமாக இல்லாமல், நாம் அன்றாடம் உலா வரும் உற்சாக உலகமாகிவிட்டது. இந்த வீடியோக்களில் வியக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளவை வைரல் ஆகின்றன. வைரலாகும் வீடியோக்களின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியத்திற்குக் காரணம் வித்தியாசமான செய்திகள் மட்டுமல்ல, இதெல்லாம் வைரலாகுமா என்ற அதிர்ச்சியும் தான். ஆனால் இயற்கை தொடர்பான வீடியோக்கள் எப்போதும் அனைவராலும் விரும்பப்படும் வீடியோக்களாக இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் வீடியோக்களை சில பதிவர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். சிலரோ, வீடியோவை கண்டெண்ட்டாக உருவாக்கி வருகின்றனர். அவை, நமது அன்றாட வாழ்வில் தினசரி பார்க்கும் விஷயமாக இருந்தாலும் சரி, பார்க்கவே முடியாத அதிசயமான வீடியோவாக இருந்தாலும் சரி.

வைரல் வீடியோக்களால் ஈர்க்கப்பட்ட சிலர், வீடியோக்கள் பார்ப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர். தொடர்ந்து சமூக ஊடகங்களில் வித்தியாசமான வீடியோக்களை பார்த்து வரும் சிலருக்கு சில பக்கங்கள் பரிச்சியமானதாக மாறிவிடும்.

மேலும் படிக்க | “என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..

அந்த வகையில், @AMAZlNGNATURE என்ற எக்ஸ் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிடப்படும் வீடியோக்கள் பலராலும் பார்த்து பாராட்டப்படுகின்றன. அவை வைரலும் ஆகின்றன. இன்று நாம் அப்படி சில வீடியோக்களைப் பார்க்கலாம். 

வீடியோக்கள் வைரல்

 சமூக ஊடக தளமான ட்விட்டரில் @AMAZlNGNATURE பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் இந்த வீடியோக்களின் தொகுப்பைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இந்த பக்கத்திற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகளின் அதிகமான கமெண்டுகளையும் பெற்று வரும் இந்த எக்ஸ் பக்கத்தில் தினசரி பல வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன.  

மேலும் படிக்க | வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்

ஒரு வீடியோவில், பசித்தால் தான் சண்டைக்கு வருவோம் என்று சொல்லும் ஹைனா மற்றும் நரி அமைதியாக இருந்தால், மற்றொரு வீடியோவில் பல கரங்கள் கொண்ட ஆக்டோபஸ், நொடிக்குள் ஒரு குட்டி ஓட்டைக்குள் செல்வது ஆச்சரிமாக இருக்கிறது.

சமூக ஊடகங்கள்

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட நிலையில், இணையம் இல்லாத உலகை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு வித்தியாசமான பல செய்திகளை வழங்குகின்றன.

பயனுள்ள தகவல்களுடன், கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள உதவுகிறது என்று சொன்னால், சில நேரங்களில் அது தொல்லையாகவும் மாறிவிடுகிறது.

ஆனால், எது எப்படியிருந்தாலும், இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வனத்தின் சாம்ராஜ்ஜியத்தில் நாம் வழக்கமாக பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகும். 

மேலும் படிக்க | ‘ஏம்மா அந்த பக்கமா போம்மா’.... எருமையை கடுப்பேற்றிய பெண்ணின் டான்ஸ்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News