Viral: நாய்களிடம் சிக்கிய பூனை... கில்லி விஜய் போல் வந்து காப்பாற்றிய இன்னொரு பூனை - மிரளவைக்கும் வீடியோ

Cat Viral Video: நாய்கள் கூட்டத்தில் சிக்கிய ஒரு பூனையை, சூப்பர் ஹீரோ போல் வந்து ஒரு பூனை காப்பாற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 23, 2024, 07:21 PM IST
  • இந்த வீடியோ Reddit தளத்தில் வைரலாகி வருகிறது.
  • 5 நாள்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ 14 நொடிகளே இருந்தாலும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
Viral: நாய்களிடம் சிக்கிய பூனை... கில்லி விஜய் போல் வந்து காப்பாற்றிய இன்னொரு பூனை - மிரளவைக்கும் வீடியோ title=

Cat Dog Fight Viral Video: இணையம் முழுவதும் வனவிலங்குகள், பறவைகள் சார்ந்த வீடியோக்கள் அதிகம் உள்ளன. விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவது, தங்களுக்குள்ளேயே சண்டைப் போட்டுக்கொள்வது, தனக்கு ஜோடியை தேர்வு செய்ய விலங்குகள் செய்யும் வினோத காரியங்கள், உணவு மற்றும் நீர் தேடி யானை போன்ற விலங்குகள் வலசை போவது, பறவை கூடு கட்டுவது முதல் முட்டையிட்டு, அதை குஞ்சு பொரித்து அதற்கு உணவளிப்பது வரை பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. 

இயற்கையின் பேராற்றலை காண விரும்புபவர்களுக்கும், சுற்றுச்சூழல் சார்ந்த ஈடுபாடு கொண்டவர்கள்தான் வனம் சார்ந்த, வனவிலங்குகள் சார்ந்த வீடியோக்களை அதிகம் விரும்பி ரசித்து பார்ப்பார்கள். அதேபோல், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய், பூனைகள் சார்ந்த வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வைரலாகும். இதை ரசிப்பதற்கும் இணையத்தில் ஒரு தனிக்கூட்டமே உலாவுகிறது. ஆரஞ்சு நிற பூனைகள், லேப்ரடார் மற்றும் கோல்டன் ரெட்ரைவர் நாய்கள் ஆகியவை வீட்டில் செய்யும் சேட்டைகளும் ஆயிரக்கணக்கில் வீடியோவாக கொட்டிக்கிடக்கிறது. 

நாய்கள் கூட்டத்தில் சிக்கிய பூனை...

அந்த வகையில் தற்போது நாய்களுக்கும் பூனைகளுக்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் நான்கு நாய்கள் சேர்ந்து ஒரு பூனையை கட்டம் கட்டி தாக்குதல் நடத்துகின்றன. உடனே, எங்கிருந்தோ ஓடி வரும் மற்றொரு பூனை தாக்குதலில் இருந்து அந்த பூனையை விடுவித்து, நாய்களிடம் இருந்து தன்னையும் தற்காத்து கொள்கிறது. முதலில் அடிவாங்கிய பூனை தப்பித்த உடன், இந்த பூனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாய்களிடம் இருந்து தப்பித்துவிடுகிறது.

மேலும் படிக்க | முதியவர் மீது ஸ்பிரே அடித்த இளைஞர்! காலை உடைத்த போலீஸ்! வைரல் வீடியோ!

சூப்பர் ஹீரோவாக வந்த மற்றொரு பூனை

வெறும் 14 விநாடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் அந்த பூனை வந்தது, மற்றொரு பூனையை நாய்களிடம் இருந்து காப்பாற்றியது, நாய்கள் கூட்டத்தில் இருந்து தப்பியோடியது என டக் டக்கென அனைத்தையும் அந்த பூனை செய்தது எனலாம். அவை வீட்டில் வளரும் பூனைகள் போல் தெரியவில்லை. பூனை தெருக்களில் அலையும்போது நாய்களிடம் சிக்கியிருக்கலாம், அதை அங்கு திரியும் நண்பன் பூனை (?!) காப்பாற்றியிருக்கலாம். பூனைகள் சாதுக்கள் என்றாலும் சாமர்த்தியசாலிகள் என பொதுவாக கூறப்படுவது உண்டு. இந்த வீடியோ பார்த்தால் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. 

வைரலாகும் வீடியோ

Reddit சமூக வலைதளத்தில் இந்த துணிச்சலான பூனையின் சாகச வீடியோ அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், X போன்ற சமூக வலைதளங்களிலும் அதிகம் பரவி வருகிறது. @CuriousWanderer567 என்ற Reddit தளத்தின் பயனர் இந்த வீடியோவை கடந்த 5 நாள்களுக்கு முன்னர் பதிவேற்றி உள்ளார். ஆனால் இந்த வீடியோ யாரால் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அங்கிருக்கும் வீட்டின் சிசிடிவியில் பதிவான காட்சியே தற்போது வைரலாகி வருகின்றன. 

டாம் & ஜெரி கார்டூனில் டாம் என்ற பூனை, ஸ்பைக் எனும் நாயிடம் சிக்கிப்படும் பாடுகளை நாம் அந்த காலத்தில் இருந்தே சிரித்து ரசித்து வந்திருப்போம். அப்படியிருக்க நிஜ வாழ்வில் ஸ்பைக் கூட்டத்தை எதிர்த்து ஒற்றையான டாம் போராடி வெல்வது என்பது பார்க்கவே வியப்பாக இருக்கிறது. நிச்சயம் அந்த பூனைக்கு சூப்பர் ஹூரோ குணங்கள் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் நெட்டிசன்கள். கில்லி படத்தில் முத்துப்பாண்டி கோட்டைக்குள்ளேயே வந்து அவனின் அடியாட்களை அடித்து நொறுக்கி, தனலட்சுமியை வேலு காப்பாற்றிக் கொண்டுபோகும் காட்சியை போல் உள்ளது இந்த வீடியோ என்கின்றனர் நம்மூர் நெட்டிசன்கள்... 

மேலும் படிக்க | “நானே பாவமா இருக்கேன்டா” ஹோம்-வர்க் எழுத கதறும் சிறுமி-சிரிக்கும் நெட்டிசன்கள்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News