இந்தியா மற்றும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய தமிழ்ப் படங்கள் பலவற்றை திரையில் வெளியிடுவதற்கு முன் இணையத்தில் வெளியிட்டு தயாராப்பாளர்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது தனது கவனத்தை ஹாலிவுட் பக்கம் திருப்பியுள்ளது. 


புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இணையத்தில் வெளியிட்டுவது வழக்கம், ஆனால் இந்த முறை திரை வெளியிட்டீற்கு முன்னதாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. 


நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் தற்போது தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


முன்னதாக நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸில் அவெஞ்சர்ஸ் படத்தின் ப்ரீமியர் காட்சி ஸ்க்ரீன் செய்யப்பட்டது. இந்த திரையரங்கில் இருந்து தமிழ் ராக்கர்ஸ்க்கு படத்தின் பதிவு கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.



பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி படத்தின் வசூளை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.