வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன.


நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்ற பட்டத்தை வைத்திருக்கின்றன என்பதில் மறுக்க முடியாத உண்மை உள்ளது. அவை மனிதனின் உறுதியான நண்பர்கள் என்று கூறுவதில் தவறில்லை. அவை தங்கள் முதலாளிகளை உடனடியாக நம்பி விடும். மேலும், அவர்கள் சோகமாக இருக்கும்போது அருகில் வந்து கட்டிக்கொண்டு ஆறுதல் கூறும் இயல்பு கொண்டவை அவை. 


நாய்கள் தங்கள் எஜமானர்களை எவ்வளவு நேசிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு முதியவர் மிக மெதுவாக நடந்து செல்ல, அவரது வளர்ப்பு நாய் அவருடன் அவரைப் போலவே மிக மெதுவாக நடப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இதயத்தை கவரும் வண்ணம் உள்ளது. 


முதியவருடன் துணையாக செல்லும் நாய்


இந்த வீடியோவில் கூன் முதுகு கொண்ட முதியவர் ஒருவர் தனது செல்ல வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செய்வதை காண முடிகின்றது. அந்த நபர் முதுமை தொடர்பான பிரச்சனைகளால் மிகவும் மெதுவாக நடக்கிறார். பிடிமானத்திற்காக அவர் கையில் ஒரு கம்பையும் பற்றி இருக்கிறார். தனது எஜமானரின் வயதுக்குட்பட்ட நிலைமைகளை நன்கு அறிந்திருக்கும் அந்த நாய், எந்த வித வேகத்தையோ, அவசரத்தையோ குறும்புத்தனத்தையோ காட்டாமல் அவருக்கு ஈடாக மிக மெதுவாக நடக்கிறது. அந்த நபர் மிக மெதுவாக நடக்கும்போது அந்த நாயும் அவரை பின்பற்றி அப்படியே நடக்கிறது. சில சமயங்களில் சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு, பின், தனது எஜமானருக்காக பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்கின்றது. ஒரு முறை கூட அது தன் எஜமானரை தனியாக விடவில்லை.


மேலும் படிக்க | Viral Video: நீ நடந்தால் நடை அழகு... தத்தி தத்தி நடைபயிலும் குட்டியானை!


நாயின் நம்ப முடியாத செயலை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இப்போது வைரலாகியுள்ள இந்த வீடியோ ஆகஸ்ட் 6 அன்று சமூக ஊடக தளமான ட்விட்டரில் பகிரப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோவில் நாயின் அற்புதமான குணாதிசயம் நமக்கு தெரிவதோடு இது நமக்கு ஒரு அற்புதமான பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றது. வயது முதிர்ந்தவர்களுக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அந்த பாடம். 


மேலும் படிக்க | தாத்தாவுக்கு கல்யாணம்: இணையத்தின் இளசுகளை கடுப்பேற்றும் முதியவர்.. வைரல் விடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ