விலங்குகள் மோதல் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் இருக்கின்றன. அதில் யானை, புலி, பூனை மற்றும் நாய் வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது. புலி பதுங்கி பாய்ந்து விலங்குகளை தாக்கும் காரணத்திற்காகவே அதன் வீடியோவை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக மான் வேட்டையில் புலி தான் கில்லாடி. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தான் மான் புலியை ஏமாற்றிவிட்டு தப்பிச் செல்லும். மற்ற நேரங்களில் புலிக்கு இரை மான் மட்டுமே. எவ்வளவு தொலைவில் இருந்து குறி வைத்தாலும் அதற்கேற்ப கணக்கச்சிதமாக திட்டமிட்டு அந்த இரை அருகில் சென்று வேட்டையை முடித்துவிடும். சில நேரங்களில் நம்ப முடியாத அளவுக்கு புலி தாக்குதல் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்


அப்படி தாக்குதலை தொடுக்கும் புலி சில விலங்குகளைக் கண்டால் மட்டும் ஏதும் செய்யாமல் அமைதியாக சென்றுவிடும். யானை கரடி மற்றும் சிங்கங்களை சொல்லாம். இதனை வேட்டையாட புலி எப்போதும் முற்படாது. அந்தவகையில் யூடியூப்பில் கரடியை புலி நேருக்கு நேர் சந்திக்கும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. புலி கரடியை தொலைவிலேயே பார்த்துவிட்டதால், அது வந்த வழியிலேயே பதுங்கிக் கொள்வதுபோல் படுத்திருக்கிறது. ஆனால் கரடி முதலில் புலியை பார்க்கவில்லை. எதிரே நடந்து சென்றாலும் சில அடி தூரங்கள் அருகில் சென்ற பிறகே புலி படுத்திருப்பதை பார்க்கிறது. அப்போது புலியை பார்த்ததும் செம ஷாக்காகிறது. 



மேலும், கரடிக்கு தாங்க முடியாத கோபமும் வந்துவிட, அதனை எப்படியாவது துரத்திவிட வேண்டும் என உடல் பாவணையிலேயே கோபத்தை காட்டுகிறது. அதற்காக புலியை நேருக்கு நேராக எழுந்து நின்று தன்னுடைய கம்பீரமான உடலை சிலிர்த்துவிடுவதுபோல் குலுக்குகிறது. இதனைப் பார்த்த புலிக்கு ஒரு நிமிடம் குலையெல்லாம் நடுங்கினாலும், அமைதியே இப்போதைக்கு இருக்க வேண்டிய தந்திரம் என அமைதி காக்கிறது. கரடியும் புலியை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க, சில நொடிகள் கழித்து அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இந்த வீடியோ இதுவரை சுமார் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. புலிக்கு எதிரில் நேருக்கு நேராக சென்று உடலை கம்பீரமாக கரடி குலுக்குவது காண்போருக்கும் கூட சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.  


மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ