தண்ணீருக்குள் கர்ப்பகால ஃபோட்டோஷூட் செய்து அசத்தும் வெண்பா
சீரியல் நடிகை ஃபரீனா லேட்டஸ்ட்டாக, நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில், சிவப்பு நிற உடையில், பெரிய வயிற்றை காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்தமுத்து டிவி சீரியலின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. தமிழில் ஒளிபரப்பு ஆகி வரும் இந்த சீரியல் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், வெண்பாவாக ஃபரீனா ஆசாத்தும் (Farina Azad) நடித்து வருகின்றனர். இதில் வில்லியாக நடித்து வரும் வெண்பாவிற்கும் எக்கச்செக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ALSO READ | கடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்; கிளாமர் அழகி ஷிவானி போட்டோஸ் வைரல்
பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, அவரை திருமணம் செய்து கொள்ள பல சதிகளை செய்கிறார். இந்த சதித் திட்டத்தால் பாரதியும் கண்ணம்மாவும் (Bharathi Kannamma) பிரிந்து உள்ளனர். இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா, இனி அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க மாட்டார். என பல விதமான வதந்திகளும், கேள்விகளும் எழுந்தது. ஆனால் அது எதுவும் உண்மையில்லை என்றும் பாரதி கண்ணம்மா கேரக்டரில் தான் தொடர்ந்து நடிக்க போவதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பிரேக் எடுத்துக் கொள்ள போவதாகவும் ஃபரீனா அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஃபரீனா.
இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை ஃபரீனா லேட்டஸ்ட்டாக, நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில், சிவப்பு நிற உடையில், பெரிய வயிற்றை காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார். அத்துடன், கர்ப்பம் என்பது நோயல்ல. வாழ்க்கையின் ஒரு அங்கம். அதனால் பெண்மணிகளே பயமின்றி, பாதுகாப்பாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ஃபரீனாவின் இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோவிற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.
ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR