Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் (Kamalhaasan) தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்தார். இதற்கிடையில் விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என ஒரு பட்டியல் இணையத்தில் உலா வருகிறது.


ALSO READ | இவருக்கு ஜோடியாகும் ஷிவாணி; வெளியான Proof போட்டோ


அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.


இந்நிலையில், தற்போது பிக் பாஸ் 5 இன் இரண்டாவது புரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தி இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. பின்னர் பேசும் கமல், ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்லயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர் பாருங்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் என்கிறார்.


ALSO READ | Anitha Sampath Divorce: கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்; உண்மை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR