இருசக்கர வாகனத்தில் விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என காலங்காலமாக அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் வாகன விபத்தில் ஏற்படும் கசப்பான நிகழ்வுகள், ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக அமைந்துவிடும். அதனால் அவர்களின் குடும்ப சூழ்நிலையும் தலைகீழாக மாறிவிடும். இதற்கான எடுத்துக்காட்டுகளை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். உலகில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இந்தியாவில் ஏதேனும் ஒரு மூலையில் சாலை விபத்தில் சிக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோட்டு கடையை தும்சம் செய்த காட்டு யானை, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ


இதுகுறித்து அரசும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்டுத்தி வருகிறது. ஆனால், இளைஞர்கள் கேட்பதாக தெரியவில்லை. பைக்கை எடுத்தவுடன் அதனை சாகச பொருளாக கருதி சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்துகின்றனர். அவர்கள் ஆபத்தில் பயணிப்பதில் மட்டுமல்லாமல், எதிரில் வருபவர்களையும் ஆபத்தில் சிக்கவைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அவர்களுடைய குடும்பமும் தேவையில்லாமல் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாகனத்தை எப்படி இயக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.



அதில் வாகனத்தை நிறுத்துவதற்கு விபரீத முயற்சியை எடுக்கும் ஒரு இளைஞர், விபத்தில் சிக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பொறுமையாக வண்டியை தள்ளிச் சென்று அழகாக நிறுத்தியிருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் சாகசம் செய்வதாக நினைத்து விபத்தில் சிக்குகிறார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து, இதுபோன்று முட்டாள் தனமாக வாகனத்தை இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | அட கடவுளே..4 வயது சிறுவனை தூக்கிய காளை..மனதை பதற வைரக்கும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ