இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் அடிக்கடி அதிர்ச்சி வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. விலங்குகள் சண்டையிடும் வீடியோக்களும் இதில் அடங்கும். அந்தவகையில் கீரி மற்றும் பாம்பு சண்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவிர, அவர்களின் சண்டை வீடியோக்களையும் நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டும். இந்த நாட்களில் உங்களை கிடுகிடுக்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்தவுடன் உங்கள் உள்ளம் நடுங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, குழந்தைகளின் மீது தாயின் பாசம் அதிகமாக இருக்கும். அதனால்தான் குழந்தைகள் எந்தப் பிரச்சனையை எதிர்கொண்டாலும், பிரச்சனையில் சிக்கினாலும் அவர்களின் வாழ்க்கைக்காக அம்மா இரவும் பகலும் பாடுபடுகின்றனர். மனிதர்களைத் தவிர, ஒவ்வொரு உயிரினமும் இப்படி தான் செய்யும், தேவைப்படும்போது தனது உயிரைக் கூட தியாகம் செய்ய துணியும். இன்று சமூக வலைதளங்களில் அப்படி ஒரு காணொளியை தான் நாம் பார்க்க உள்ளோம். இதில் பறவையின் கூட்டிற்குள் புகுந்த பாம்பு அதன் குழந்தைகளை தாக்கியது. ஆனால் பாம்பு கூடுக்கு செல்வதை பார்த்த தாய் பறவை பாம்பை தாக்கியது.


அதன் பிறகு நடந்ததைப் பார்த்தால், தாயின் அன்பு, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு என்ன செய்ய முடியும் என்பது தான் புரிந்துக் கொள்ள முடியும். @animals5s என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மரத்தின் மீது பறவை ஒன்று கூடு கட்டியிருப்பதைக் காணலாம். இதில் அவரது குஞ்சுகளும் இருப்பதையும் நாம் காணலாம். பறவையின் குஞ்சுகளை வேட்டையாடுவதற்காக ஒரு பாம்பு இந்த மரத்தின் மேல் ஏறுவதை நாம் காணலாம். அப்போதுதான் தாய் பறவையும் அங்கு சென்றடைகிறது. பாம்பு அங்கு போடப்பட்டு இருந்த கூட்டில் செல்ல ஆரம்பித்தவுடன், தாய் பறவை பாம்பை தாக்குகிறது.


மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


பறவையை பதம் பார்த்த பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



அந்த தாய் பறவை தன் குஞ்சுகளை காப்பாற்ற அந்தப் பாம்பை பலமுறை தாக்குகிகிறது. ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. அதன் பிறகு அந்தப் பறவை பாம்பின் அருகில் அமர்ந்து அதைத் தாக்கத் தொடங்குகிறது. அப்போது திடீரென பாம்பு வெளியே வந்து தாய் பறவையை தாக்கியது. திடீர் தாக்குதலில் இருந்து அந்த தாய் பறவையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்டது.  


இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வைரல் வீடியோவை இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | போட்டோ எடுத்தது ஒரு குத்தமா!! வெச்சி செஞ்ச மான்... ஷாக்கில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ