பளார்... பாம்பை அடித்து பாடாய் படுத்திய பூனை: அரண்டு போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Cat Snake Fight Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் கண்டிப்பாக நம்ப முடியாது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு காட்சியை இதில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2023, 11:45 AM IST
  • இந்த யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ ட்விட்டரில் @Singh17Nandan என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பளார்... பாம்பை அடித்து பாடாய் படுத்திய பூனை: அரண்டு போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய மனித வாழ்க்கை மிகவும் பிஸியான ஒரு வாழ்க்கையாக உள்ளது. தினம் தினம் பல்வேறு இலக்குகளை நோக்கி மக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையில், சிறிது நேரம் தங்களுக்காக கிடைத்தால், அதை நிம்மதியான பொழுதுபோக்குகளில் கழிக்க மக்கள் விரும்புகிறார்கள். தினசரி டென்ஷனிலிருந்து தங்களை தூரமாக அழைத்துச்செல்ல வழிகளை தேடுகிறார்கள். இந்த இடத்தில் சமூக ஊடகம் அவர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றது. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.

இனையத்தில் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கு இணையவாசிகளிடையே தனி ஆர்வம் உள்ளது. விலங்குகளின் வாழ்வில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல சுவாரசியமான விஷயங்களை இந்த வீடியோக்களில் காண்கிறோம். 

சமூக ஊடகங்களில் விலங்குகளின் சண்டை தொடர்பான பல வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சில காட்சிகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் வண்ணம் இருகின்றன. சில நம்மால் முற்றிலும் நம்ப முடியாத வகையிலும் இருக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவும் அப்படித்தான் உள்ளது. 

இந்த வீடியோ பாம்பு மற்றும் பூனை சண்டை தொடர்பானது. பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகின்றன. ஆனால், இந்த வீடியோவில் காணப்படும் காட்சி முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

பூனையிடம் சிக்கிய பாம்பு

இந்த வீடியோவில் ஒரு பூனை பாம்பு ஒன்றை சாலையில் காண்கிறது. அந்த பாம்பு சாலையை கடந்துகொண்டு இருக்கின்றது. பூனையின் கண்களுக்கு நெளிந்து வளைந்து போகும் அந்த பாம்பு விசித்திரமான உயிரினமாக காணப்பட்டது போல உள்ளது. அது அந்த பாம்பை பல விதங்களில் தொந்தரவு செய்கின்றது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

மேலும் படிக்க | சோகத்தில் விவசாயி.... வாரி அணைத்துக்கொண்ட மாடுகள்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

பாம்பை பளார் என அடித்த பூனை

வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையோரம் ஊர்ந்து செல்லும் பாம்பின் மீது பூனையின் கண் பட்டதை காண முடிகின்றது. அது உடனே பாம்பின் அருகில் சென்று அதன் பாதையை தடுக்கத் தொடங்குகிறது. பூனையை பார்த்ததும் பாம்பு வேகமாக ஊர்ந்து போகத் தொடங்குகிறது. ஆனால் பூனை பாம்பைத் தொந்தரவு செய்வதில் உறுதியாக இருந்தது. அது மீண்டும் மீண்டும் சென்று பாம்பின் பாதையைச் சுற்றி வருகிறது. பாம்பு கோபமடைந்து பூனையை பல முறை கடிக்க முயற்சிக்கிறது. ஆனால் பூனை விரைவாக பின்வாங்கி பாம்பை அறைந்தது. இது காண்பதற்கு மிக வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. பாம்பும் பூனையும் சண்டை போடுவதைக் காண பெரும் கூட்டம் கூடுகிறது. சிலர் இந்த காட்சியை வீடியோ எடுக்கின்றனர். 

மிகவும் வைரலான காட்சி

பொதுவாக, பாம்பைக் கண்டாலே மனிதர்களும் பிற விலங்குகளும் அஞ்சி ஓடுவதுண்டு. ஆனால் இந்த வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சியை நாம் காண்கிறோம். இதில் பூனை பாம்பை பாடாய் படுத்துகிறது. பாம்பு மற்றும் பூனையின் இந்த வீடியோ மக்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ யூடியூப் ஷார்ட்சில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது.

மிக வித்தியாசமான பாம்பு பூனை சண்டை வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ ட்விட்டரில் @Singh17Nandan என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | மரத்தில் தொங்கும் பாம்பின் தனித்துவமான நடனம்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News