Bizarre Beauty பெரிய தொந்தி இருந்தா தான் ஆணழகன்: அழகுக்கு வித்தியாசமான வரையறை
குண்டா இருந்தா தான் அழகு! இது இந்த நாட்டின் ஸ்டைல்... அதுக்காக ஆறு மாதம் தனிமையில் இருந்து தொந்தி வளர்க்கும் மக்கள்...அது எந்த நாடுப்பா?
ஸ்லிம்மாக இருப்பது எப்படி என்று இணையத்தில் பலவிதமான டிப்ஸ்கள் உள்ளன. ஆரோக்கியமான மற்றும் மெலிந்த உடலைக் கொண்டிருப்பது உலகம் முழுவதிலும் உள்ள அழகின் தனிச்சிறப்பாகும், ஆனால் எத்தியோப்பியாவின் போடி பழங்குடியின மக்களின் அழகுக்கான வரையறை உலகில் இருந்து மாறுபடுகிறது.
பிறரின் அழகு வரையறைகளின்படி, போடி பழன்குடியின மக்கள் அழகாக இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களில் யாருடைய வயிறு மிகவும் பெரிதாக இருக்கிறதோ அவர்கள் தான் மிகவும் அழகானவர் என்று நம்பப்படுவதில்லை.
இது விளையாட்டுக்காக சொல்லும் வார்த்தைகளில் இல்லை. உண்மையிலுமே மிகவும் பெரிய தொப்பை மற்றும் தொந்தியுடனும் இருப்பவர் தான் போடி பழங்கிடியினத்தில் ஆணழகன் என்ற பெருமையை அடைகிறார்.
மேலும் படிக்க | காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்
பெரிய வயிறு கொண்டவர்
குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில், பெரிய வயிற்றைக் கொண்ட ஒரு இளவரசன், இளவரசியை சிரிக்க வைத்து வெகுமதியைப் பெற்றுக் கொள்வான். பெரிய தொப்பை வைத்திருக்கும் போடி பழங்குடியினரிடம் இந்த வழக்கம் இன்றும் இருக்கிறது.
அவர்களிடையேயும் ஆண்களுக்கான அழகுப் போட்டி நடக்கிறது. இந்த அழகிப் போட்டியில் ஆண்களின் வயிற்றின் அளவு அளவிடப்படுகிறது. யாருடைய வயிறு பெரியதாக இருக்கிறதோ அவரே ஆணழகன் என்று மகுடம் சூடுகிறார்.
ஒரு முறை ஆணழகன் பட்டம் பெற்ற மனிதன், தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ஹீரோவாகவே கருதப்படுகிறான், போற்றப்படுகிறான்.
மேலும் படிக்க | அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன்
உண்மையில் தொந்தியை குறைக்க நாம் பல பிரம்ம பிரயத்தனம் செய்கிறோம். ஆனால், போடி பழங்குடி மக்கள் பெரிய வயிறு வேண்டும் என்ற்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் குடிக்கும் பானம் வித்தியாசமானது.
எத்தியோப்பியாவில், போடி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள், ரத்தமும் பாலும் கலந்த வித்தியாசமான பானத்தைக் குண்டாக முயற்சி செய்கின்றனர்.
இதற்காக அவர்கள் 6 மாதங்கள் தனிமையில் இருந்து வயிற்றை பெரிதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்த பழங்குடியினர் பற்றி உலகுக்குச் சொன்ன பெருமை பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் எரிக் லாஃபோர்க் என்பவரையே சாரும்.
மேலும் படிக்க | KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR