KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள்

கேஜிஎஃப் நட்சத்திரம் யஷ் ராக்கியின் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சித் திட்டம் அனைவரையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2022, 04:49 PM IST
  • நடிகர் யஷ்ஷின் உணவு பழக்கம்
  • ராக்கியாக மாற யஷ் கடைபிடிக்கும் உணவு பழக்கம்
  • இப்படி சாப்பிட்டா அழகாகலாமா
KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள் title=

கேஜிஎஃப் நட்சத்திரம் யஷ் ராக்கியின் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சித் திட்டம் அனைவரையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது.

ராக்கி என்று அனைவராலும் தற்போது அறியப்படும் யஷ் என்கிற நவீன் குமார் கவுடா, சமீபத்தில் வெளியான தனது பிளாக்பஸ்டர் கேஜிஎஃப் அத்தியாயம் 2 இன் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்தார் யஷ் என்பது பலருக்குத் தெரியாது. படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக, ராக்கி பாய் சரியான உடலமைப்பைப் பெற கடுமையான உடற்பயிற்சிகளைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash)

நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் அத்தியாயம் 2 உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டையை நடத்தி வரும் திரைப்படம், ராக்கி பாய் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை சுற்று வருகிறது.

மேலும் படிக்க | கொரோனாவுக்கு பிறகு அதிக வருமானம் குவித்து சர்வதேச சாதனை செய்த Monster KGF 2

kgf

பிரம்மாண்டம், தொழில்நுட்பம், கதையமைப்பு என யஷ்ஷை ராக்கி பாயாக வெற்றி பெற வைக்க ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றினார்கள்.

ஆனால், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்திற்காக தன்னை கடுமையாக உருமாற்றிய யஷ், அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இந்த பாராட்டுக்காக அவரின் உழைப்பு மிகவும் கடினமானது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash)

சரியான உடலமைப்பைப் பெற இரவு பகலாக உழைத்த யஷ், எதுபோன்ற உணவு பழக்கத்தை பின்பற்றினார் தெரியுமா?

மேலும் படிக்க | மலேரியா பாதித்தவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிடக்கூடாது
 
யஷ் பின்பற்றும் உணவுத் திட்டம்:  நடிகர் யஷ் பின்பற்றும் உணவு பழக்கம் மிகவும் கடுமையானது. அவரது காலை உணவில் கொட்டைகள், ஜாதிக்காய், கோதுமை ரொட்டியின் ஐந்து துண்டுகள் மற்றும் காய்கறிகள். இத்துடன் எட்டு முட்டையின் வெள்ளை கருக்கள் என அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ள காலை உணவு அவருக்கு ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்திருந்தார்.

கேஜிஎஃப் நாயகனின் காலை உணவில் தர்பூசணி மற்றும் பப்பாளி ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன.

மதிய உணவை காலை 11 மணியளவில் சாப்பிடுவார் யஷ், மதிய உணவில் புரோட்டீன் ஷேக்குகள் மற்றும் பருவகால பழங்கள் அடங்கும்.

கடல் உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதாகவும், அதில் மீன்கள் அதிகமாகவும் இருக்கும் என்றும் ஹெல்த் யோகி செய்தி வெளியிட்டுள்ளது. யஷ் தனது புரத உட்கொள்ளலை சமன் செய்வதற்காக தனது உணவில் மீனை அடிக்கடி சேர்த்துக்கொள்வார். 

health

மாலையில், நடிகர் ஜிம்மிற்குச் செல்வதற்கு முன், நான்கு துண்டு பிரட் மற்றும் நான்கு வாழைப்பழங்களை சாப்பிடுகிறார். இரவு உணவிற்கு, அவர் இலகுவான ஆனால் புரதம் நிறைந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுகிறார் யஷ்.

யஷ்ஷின் வொர்க்அவுட் வழக்கம்:
நடிகர் யஷ் வாரத்திற்கு 6 முறை வொர்க் அவுட் செய்கிறார். அவரது வொர்க்அவுட்டில், கார்டியோ மற்றும் தசை பயிற்சிக்குக் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது அவரது உடலை பராமரிக்க உதவுகிறது. 

 காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் நடிகர் யஷ், தினசரி ஒரு மணிநேரம் கார்டியோ எக்சர்சைஸ்களை செய்வார். பின்னர் எடை பயிற்சிக்கு செல்கிறார். இவற்றைத் தவிர வெவ்வேறு பயிற்சிகளையும் செய்கிறார் யஷ்.

குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஏபிஎஸ் உடற்பயிற்சிகளையும் செய்கிறார். அவரது வொர்க்அவுட் நடைமுறைகளில் 30 நிமிட பவர் பயிற்சி- புஷ்-அப்கள், புல்-அப்கள் ஆகியவை அடங்கும்.

நடிகர் யஷ் ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்கிறார். வாரத்தில் ஒரு நாள் மட்டும் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கிறார். அன்று மட்டும் தனக்கு பிடித்தமான உணவை சாப்பிடுகிறார் ராக்கி பாயாக வாழ்ந்த நடிகர் யஷ்.

மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News