நா பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்..நாய் மற்றும் மலைப்பாம்பின் வைரல் வீடியோ
சும்மா ரோட்டோரம் படுத்துக் கிடந்த நாயை வம்புக்கு இழுக்க நபர் ஒருவர் 20 அடி நீள மலைப்பாம்பை அதன் மீது போட்டுகிறார். இதன் பின் அந்த நாய்க்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.
நாய் மற்றும் மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், நடுரோட்டில் படுத்திருந்த நாய் மீது நபர் ஒருவர் ராட்சத மலைப்பாம்பை போடுவதை நாம் காணலாம். இதன் பின் அந்த நாய்க்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.
மேலும் படிக்க | Video: மறுபிறவி கொடுத்த இளைஞர்... நண்பனாக மாறிய நாரை - பறவையின் பாசப்பிணைப்பு!
நாய் மற்றும் மலைப்பாம்பு
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நாய் ஒன்று நடுரோட்டில் ஓய்யாரமாக படித்திருப்பதை நாம் காணலாம். அப்போது அங்கு இருந்த இரு நபர் தன் கையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பை தன் கையில் எடுத்துக் கொண்டு அந்த நாயின் மேல் விழுகிறார். நெஞ்சை பதற வைக்கும் இந்த செயலைக் கண்டு உங்களால் கோபத்தை கட்டாயம் அடக்கவே முடியாது.. இருப்பினும் வீடியோவை நன்கு உன்னித்து பார்த்தால் தான் உங்களுக்கு புரியும் அது நிஜப் பாம்பு இல்லை பொம்மை பாம்பு என்று. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.
வீடியோவை இங்கே காணுங்கள்:
இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ