Bear Viral Video: வனவிலங்குகளை பார்த்தாலே நாம் எல்லாரும் ஒரு நிமிடம் சட்டென பயன்படுவோம். அது தூரத்தில் இருந்தாலும் சரி, அது கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் சரி புலி, சிங்கம், கரடி, சிறுத்தை, காட்டு யானை ஆகியவற்றை நேரில் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு உள்ளுக்குள் ஒரு பிரமிப்பும், மிரட்சியும் ஏற்படும். அதன் உருவம், அதன் தோரணையை பார்த்தாலே உடலுக்குள் ஜிவ்வென்று ஷாக் அடிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வனவிலங்குகளை வீடியோவில் பார்த்தாலும் அதே நிலைதான். இருந்தாலும் மிகுந்த பாதுகாப்பான இடத்தில் இருந்துக்கொண்டு வனவிலங்குகளை பார்ப்பதால் உங்களுக்கு அதன் மீதான ஆர்வமும் அதிகமாகும். அதனால்தான், தொலைக்காட்சி சேனலில் மிருகங்கள் வேட்டையாடுவதையும், அதன் காட்டு வாழ்க்கையையும் நாம் ரசித்து பார்க்கிறோம். இதன் காரணமாகவே, இணையத்திலும் வனவிலங்குகளின் வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. 


கரடியுடன் மல்யுத்தம்


அந்த வகையில், ரஷ்யாவின் குத்துச்சண்டை வீரர் ஒருவர், நல்ல திடகாத்திரமாக உருவத்தில் பெரிதாக இருக்கும் கரடியுடன் சேர்ந்து சண்டையிடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நம்மூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் மூர்க்கமான காளைகளை எப்படி நமது இளம் காளையர்கள் அடக்குவார்களோ அதேபோல், இந்த கரடியுடன் மல்லுக்கட்டி அந்த குத்துச்சண்டை வீரர் மோதுகிறார். 


மேலும் படிக்க | ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் ஸ்லோ-மோஷனில் நடந்த வாலிபர்! திக் திக் வீடியோ..


இந்த வீடியோ அந்த குத்துச்சண்டை வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, அது தற்போது வைரலாகி வருகிறது. கரடிக்கும், மனிதருக்கும் இடையிலான இந்த சண்டையை யாருமே பார்த்ததில்லை என்பதால் இந்த வீடியோ அதிகமாக பார்க்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, இன்ஸ்டாவில் மட்டுமின்றி பல்வேறு சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகி உள்ளது.


வைரல் வீடியோவும், விமர்சனமும்


Arslanbek Makhmudov என்ற அந்த குத்துச்சண்டை வீரர் இந்த வீடியோவை பதிவிட்டு இன்ஸ்டாவில்,"நானும், எனது நண்பர்களும் காட்டில் சென்றுகொண்டிருந்தோம். அங்கு ஒரு கரடி எங்களை சந்தித்தது. உடனே,  இருவரில் யார் நன்றாக சண்டையிடுவார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிவெடுத்தோம்" என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்தபோது நகைச்சுவையாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தது. இருப்பினும், முறையான பாதுகாப்பின்றி இதுபோன்று ஈடுபடுவது தவறு என ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.