வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன. குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். இந்த வீடியோக்களில் இவர்களது வெகுளித்தனமும், அப்பாவித்தனமும், தாங்கள் செய்யும் வேலையில் இருக்கும் அர்ப்பணிப்பும் நன்றாகத் தெரிகின்றன. 


ஒரு காலத்தில், ஒரு சிறிய பகுதி அல்லது நகரத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளி உலகுக்கு தெரியாமலேயே அடங்கிப்போயின. ஆனால் இன்று இணைய புரட்சி உலகம் முழுவதையும் ஒன்றிணைத்துள்ளது. இதனால் உலகில் பலரது மறைந்து கிடக்கும் திறமைகள் சமூக வலைதளங்கள் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவர்களது திறமையைக் கண்டு மனம் மகிழ்கிறது, ஆச்சரியம் நம்மை ஆட்கொள்கிறது. 


இணையம், சமூக ஊடகங்கள் என்று எதுவும் இல்லாதபோதும் இப்படிப்பட்ட திறம் படைத்தவர்கள் இருந்தார்கள். ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் அபரிமிதமான திறமையை காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் அந்த சிறுவன் மிக அழகாக, அர்ப்பணிப்புடன் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை கூறுவதை காண முடிகின்றது. இது ஆச்சரியப்படும் அளவில் உள்ளது. 


சிவ தாண்டவம் சொல்லும் சிறுவன்


ஒரு கிராமத்தில் சில பெண்கள் வயல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு சிறுவன் வருகிறான். அந்த பெண்களில் ஒருவர் அந்த சிறுவனிடம் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை சொல்லும்படி கேட்கிறார். அதற்கு இணங்கும் சிறுவன், தன் காலணிகளை அவிழ்த்து விட்டு வந்து சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை கூறுகிறான். 


மேலும் படிக்க | திடீர்னு இப்படி டிரெயின் வந்தா? பொறுமையா இருங்க, உயிர் தான் முக்கியம் வைரல் வீடியோ


சிறுவன் இதை சொல்லும் முன் தன் காலணிகளை கழட்டிவிட்டு சொல்வது இந்த வீடியோவை காண்பவர்களை நெகிழ வைக்கிறது. கடவுளின் புகழை பாடும்போது காலணியை கழற்ற வேண்டும் என்ற புரிதல் சிறுவனுக்கு இருக்கிறது. சிறுவன் சிவ தாண்டவம் பாட ஆரம்பிக்கிறார். இதில் அவரது உணர்ச்சிகரமான முக பாவமும், ஸ்பஷ்டமான உச்சரிப்பும் நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கின்றது. 


சிறுவனின் அற்புதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் shivanshprajapati021 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை இதற்கு  20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | பைக்கில் அட்டகாசமான ஸ்டண்ட்... மாஸ் காட்டும் தாத்தா: ஷாக்கில் நெட்டிசன்ஸ்... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ