பைக்கில் அட்டகாசமான ஸ்டண்ட்... மாஸ் காட்டும் தாத்தா: ஷாக்கில் நெட்டிசன்ஸ்... வைரல் வீடியோ

Funny Old Man Video: வயதானாலும் சிலருக்கு துணிச்சலும் வேடிக்கையான மனோபாவமும் குறைவதில்லை. ஒரு தாத்தாவின் அசத்தலான பைக் ஸ்டண்ட் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 07:47 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Ankitydv92 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பைக்கில் அட்டகாசமான ஸ்டண்ட்... மாஸ் காட்டும் தாத்தா: ஷாக்கில் நெட்டிசன்ஸ்... வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்கள் ஒரு புதிய சகாப்தம். இங்கு மக்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் உள்ளனர். தனிப்பட்ட விஷயங்கள் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகின்றன. மேலும் மக்கள் தங்கள் தனித்துவமான திறமைகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். இதனால் பலரது பாராட்டுதல்களையும் பெறுகிறார்கள். வியூஸ்களும் லைக்குகளும் குவிகின்றன. இவற்றை மேலும் பெற புதிய முயற்சிகள் பலவற்றை மெற்கொள்கிறார்கள். 

இதுபோன்ற ஒரு விசித்திரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் முதியவர் ஒருவர் தனது விசித்திரமான தனித்தன்மையை காட்டுகிறார். பைக்கில் அபாரமாக ஸ்டண்ட் செய்கிறார். உயிரை பணயம் வைத்து பைக் ஸ்டண்ட் செய்யும் அளவிற்கு இவரது லைக் மோகம் அதிகரித்து விட்டது போலும். 

பைக்கில் பக்காவாக ஸ்டண்ட் செய்யும் முதியவர்

இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து வெள்ளை தாடியுடன் முதியவர் ஒருவர் பைக்கில் பல வித்தைகளை செய்வதை காண முடிகின்றது. அவர் ஒரு நேரம் பைக்கின் கைப்பிடியில் இருந்து கையை எடுத்துவிட்டு பைக்கை ஓட்டுகிறார், ஒரு நேரம் பைக்கின் பின்புறம் படுத்துக்கொண்டு பைக்கில் கைகளை உயர்த்தி பல்லே பல்லே என ஆடுகிறார். பேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இதை பைக்கில் பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஆபத்தானது மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளுக்காகவும் வியூஸ்களுக்காகவும் மக்கள் எனன்வெல்லாம் செய்யத் துணிகிறார்கள் என்ற பகீர் புரிதலையும் நமக்கு அளிக்கின்றது. 

மேலும் படிக்க | சண்டைக்கு குறுக்கே வந்த டிரைவரை ஆட்டோவுடன் தலைகீழாக கவிழ்த்த மாடுகள் வீடியோ வைரல்

தத்தா காட்டும் ஸ்டண்டின் பகீர் வீடியோவை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Ankitydv92 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் அந்த  முதியவரையும் அவரை ரிஸ்கான ஸ்டண்ட் செய்ய வைத்து வீடியோ எடுத்தவரையும் விமர்சித்து வருகிறார்கள். 'இந்த வயதான காலத்தில் இந்த முதியவருக்கு இது தேவையா?' என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிலர் முதியவரின் எனர்ஜியையும் இன்னும் துடிதுடிப்புடன் இருப்பதையும் பாராட்டினாலும், பலர் தன் உயிரை பணயம் வைத்து இதை செய்ததற்காக அவரை விமர்சித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: முதல் அடி எடுத்து வைக்க போராடும் குட்டியானை! கைதூக்கி விடும் தாய்யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News