Viral Video: இன்றைய காலகட்டத்தில் இணையமும் சமூக ஊடகங்களும் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளன. சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பலவற்றை பார்க்கிறோம். குறிப்பாக, இங்கு பகிரப்படும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. நாம் பல இடங்களில் நடக்கும் பல விஷயங்களை நம் கையில் உள்ள மொபைல் கொண்டே பார்க்க முடியும் என்பது ஒரு காலத்தில் கற்பனை கூட செய்து பார்த்திராத விஷயமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் பகிரப்பட்டிருந்தாலும், சில வீடியோகளுக்கு எப்போதும் அதிக மவுசு உள்ளது. விலங்குகளின் வீடியோக்கள், நடன வீடியோக்கள், குழந்தைகளின் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள் ஆகியவை இவற்றில் சில. அப்படி சில மாதங்களுக்கு முன்னர் பகிரப்பட்டு வைரல் ஆன ஒரு வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 


நடன வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள். அதுவும் குழந்தைகளின் வீடியோக்கள் இணையவாசிகள் இடையே நல்ல ஈர்ப்பை பெறுகிறது. தற்போது மீண்டும் வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்றும் நடனம் தொடர்பானதுதான். அதுவும் இந்த வீடியோவில் குழந்தைகளின் நடனத்தை பார்க்க முடிகின்றது. 


இணையத்தை தெறிக்கவிடும் நடனம்


இந்த வீடியோவில், ஒரு திருமண விழா நடப்பது தெரிகிறது. இதில் ஒரு சிறுவனும் சிறுமியும் மிகவும் மிக நேர்த்தியாக, அழகாக, கூலாக நடனமாடுவதை காண முடிகின்றது. இந்த நடனத்தை பார்த்தால் யாருக்கும் பிடிக்காமல் இருக்க முடியாது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.


திருமண நிகழ்வு என்பதால், அதில் வந்துள்ள அனைவரும் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டுள்ளனர். நடனமாடும் ஒரு குழந்தைகளையும் கூட பாரம்பரிய உடைகளில் காண முடிகின்றது.  அழகான உடையில் இரு குழந்தைகளும் பிரமாண்டமான முறையில் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் டான்ஸ் ஆடி அசத்தும் சிறுவன் வெள்ளை குர்தா அணிந்து கண்ணாடி அணிந்துள்ளார். சிறுமி அழகான லெஹங்கா அணிந்துள்ளார். ஒரு படத்தின் ஷூட்டிங் நடப்பது போல் இருவரும் பக்காவாக நடனமாடுகிறார்கள்.


மேலும் படிக்க | பேஸ்புக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா பிரமுகரின் மகன்! பீதி கிளப்பிய ஃபேஸ்புக் லைவ்!


கூலான அந்த நடனத்தை இங்கே காணலாம்



இரு குழந்தைகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல அபாரமாக டான்ஸ் ஆடுவது அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இவர்களது நடன அசைவுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த விழாவிற்கு வந்துள்ள பலர், இவர்களது டான்சை போனில் வீடியோ எடுப்பதை காண முடிகின்றது. இருவரின் முக பாவங்களும், டான்ஸ் ஸ்டெப்ஸ்களும் மிக நன்றாக உள்ளன. 


இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ (Dance Video) சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் everythingaboutnepal என்ற பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பகிரப்பட்டது. இதற்கு அப்போதே ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் குவிந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். குழந்தைகளின் அசத்தல் நடனத்தை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.


மேலும் படிக்க | இப்படி தான் பிரெட் செய்றாங்களா? இதைப் பார்த்தா இனிமே பிரேக்ஃபாஸ்ட்ல ‘நோ’பிரட் தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ