Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம். அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள். இந்த வைரல் வீடியோவும் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டக்கார தங்கை பற்றியதுதான். 


இந்த வீடியோவில், பெண்ணின் அண்ணன்கள், அவரது மணநாளில், அவர் மேல் அன்பு மழை பொழிவதைக் காண முடிகின்றது. இந்திய திருமணங்களில் பல வகைகள் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில், திருமணங்களில் அண்ணன் தங்கையை கையைப் பிடித்து அழைத்து வருகிறார். சில இடங்களில் அண்ணன் மணப்பெண்ணை தோளில் சுமந்து வருவது வழக்கம். எனினும், அனைத்து வகைகளும் 'நீ திருமணம் ஆகி சென்றாலும், நான் உன்னுடன் என்றும் இருப்பேன்' என அண்ணன் தங்கைக்கு அளிக்கும் வாக்குறுதியே  மேலோங்கி இருக்கிறது.  


இந்த வீடியோவில் நாம் காண்பது சற்று வித்தியாசமாக உள்ளது. இதில் ஒரு திருமணத்தில் வித்தியாசமான பாரம்பரியம் காணப்படுகிறது. இங்கு மணமகளின் (Bride Video) சகோதரரகள் தங்கள் சகோதரியை மணமேடைக்கு வரவேற்கும் விதத்தை பார்த்தால், கண் கலங்குகிறது. இந்த வீடியோவைப் பார்த்து பல நெட்டிசன்களால் தங்கள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையாம்!! 


இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 'witty_wedding' என்ற பயனர் வெளியிட்டார். இந்த வீடியோ 8,100க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. துவக்கத்தில், அழகான சிவப்பு நிற லெஹங்காவில் மணமகள் திருமண மண்டபத்துக்குள் நுழையத் தயாராக இருப்பதை காண முடிகின்றது. 


ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ


மணமகன் காத்திருக்கும் மேடை வரை மணமகள் நடக்க மலர் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய சகோதரர்கள் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. மணமகள் நடக்கத் துவங்கியவுடன், அவரது சகோதரர்கள், மலர் இதழ் பட்டும் அவர் பாதம் பாதிக்கப்படக் கூடாது என தங்கள் கைகளால் பாதத்தை தாங்குகிறார்கள். மணமகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு சகோதரர் தன் கைகளால் தாங்கிக்கொள்கிறார்.  இது காண்பவர்களை கண் கலங்க வைக்கிறது. 


பாச மழையாகப் பொழியும் இந்த வீடியோவை இங்கே காணலாம்: 



மணப்பெண்ணின் சகோதரர்களின் இந்த இனிமையான சைகையை இணையவாசிகள் (Netizens) விரும்பி பார்த்து வருகின்றனர். குறிப்பாக பாசம் மிக்க அண்ணன், தங்கைகள் இந்த வீடியோவை அதிகம் பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அண்ணன்கள் கிடைக்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 


ALSO READ | மேடையில் மணமகன் மடியில் விழுந்த நண்பன்! வைரல் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR