பலூனோடு பலூனாக பறந்த மணமகள், பிளான் போட்ட மாப்பிள்ளை: வைரல் வீடியோ
Funny Video: மகிழ்ச்சியில் திளைத்த மணமகன், திருமண கொண்டாட்டத்தில் கூடுதல் பொலிவை சேர்க்க நூற்றுக்கணக்கான பெரிய பலூன்களை ஏற்பாடு செய்தார். அதில் ஒரு ட்விஸ்ட் இருந்தது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த வீடியோக்களில் சில மாதக்கணக்கில் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன.
தற்போது அப்படிப்பட்ட ஒரு அரிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதில் காணப்படுவது போன்ற ஒரு காட்சியை இதற்கு முன்னர் பார்த்திருக்க முடியாது.
மேலும் படிக்க | ஆசையாய் வந்த மணமகனை பளார் என அறைந்த மணமகள்: காரணம் இதுதான், வைரல் வீடியோ
பலூனோடு பலூனாக காற்றில் பறந்த மணமகள்
இந்த வேடிக்கையான வீடியோ பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. இதற்கு பல லைக்குகளும் கிடைத்துள்ளன. வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், திருமணம் தொடர்பான அனைத்து சடங்குகளும் முடிந்து எங்கும் கொண்டாட்ட சூழல் நிலவுவது தெரிகிறது. ஏராளமான விருந்தினர்களும் திரண்டுள்ளனர். இதற்கிடையில், நாம் வீடியோவில் காணும் ஒரு காட்சி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.
மகிழ்ச்சியில் திளைத்த மணமகன், திருமண கொண்டாட்டத்தில் கூடுதல் பொலிவை சேர்க்க நூற்றுக்கணக்கான பெரிய பலூன்களை ஏற்பாடு செய்தார். பலூன்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு நாற்காலி தயார் செய்யப்பட்டு மணமகளை அதில் அமர வைத்தனர். இதற்குப் பிறகு சில நொடிகளிலேயே மணமகள் காற்றில் பறப்பதை காண முடிகின்றது. இதைப் பார்த்த விருந்தினர்கள், மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். தரையில் இருந்தபடி தங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். சிறிது நேரம் கழித்து மணப்பெண்ணை கயிறு மூலம் மீண்டும் கீழே அழைத்து வந்தனர்.
இந்த மகிழ்ச்சியான வேடிக்கையான மணமகள் வீடியோவை இங்கே காணலாம்: