Viral Video: என் வீடு இங்கே தான் இருக்கு.... பாயும் புலியின் அற்புத காட்சி

சிங்கம், சிறுத்தை மற்றும் புலி தொடர்பான வீடியோக்கள் என்றுமே நேயர்களின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் வங்காள புலி ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2022, 04:45 PM IST
Viral Video: என் வீடு இங்கே தான் இருக்கு.... பாயும் புலியின் அற்புத காட்சி  title=

காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகளுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலும் சிங்கம், சிறுத்தை மற்றும் புலி தொடர்பான வீடியோக்கள் என்றுமே நேயர்களின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் வங்காள புலி ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது

வங்காளப் புலிகள் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம், பூட்டான், மியன்மார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. 

நீங்கள் வேட்டையாடும் அல்லது காட்டில் ஓய்வெடுக்கும்போது புலியைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், காட்டிற்குச் செல்ல, தனது வாழ்விடத்திற்கு செல்ல பேராவலுடன் இருக்கும் புலியை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள். படகில் இருந்து ஆற்றில் குதித்து காட்டை நோக்கி புலி வேகமாக நீந்திச் செல்லும் விதம் இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. 

வாழ்விடம் என்றால், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் மிகவும் நெருக்கமானதை என்பதை இந்த வங்காள புலியின் வைரல் வீடியோ நமக்கு உணர்த்துகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் மிகவும் அற்புதமான காட்சி என பதிவிட்டுள்ளனர்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மீட்கப்பட்ட ஒரு புலி ஒன்று படகில் அழைத்து வரப்படுவதைக் காணலாம். ஆனால் புலி காட்டைக் கண்டவுடன், உடனடியாக ஆற்றின் நடுவில் குதித்து, வேகமாக நீந்திக் கொண்டு காட்டில் உள்ள தனது வாழ்விடத்தை நோக்கிச் சென்றது. சுந்தரவனக் காடுகளில் வசித்த புலிக்கு, தனது வாழ்விடத்தை பார்த்தவுடனேயே  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. இந்த பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

வீடியோவை இங்கே காணலாம்:
 

வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ

புலியின் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தலைப்பில், "புலியின் வலுவான பாய்ச்சல்" என குறிப்பிட்டுள்ளார். புலியைக் மீட்டு சுந்தரவனக் காடுகளில் அனுப்பும் வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 49 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகிறது. 

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News