Viral: இதுதான் என்னோட கடைசி ட்ரிப்; உணர்ச்சிவசப்பட்ட விமானப்பெண்

இண்டிகோ விமானப் பணிப்பெண் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு விடைபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2022, 11:44 AM IST
  • இண்டிகோ விமானப் பணிப்பெண்ணின் வைரல் வீடியோ
  • பாடகி அம்ருதா சுரேஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்
  • நெகிழ்ச்சியில் பயணிகள்
Viral: இதுதான் என்னோட கடைசி ட்ரிப்; உணர்ச்சிவசப்பட்ட விமானப்பெண் title=

இந்திய விமான நிறுவனமான இண்டிகோவில் விமான பணிப்பெண்ணாக சுரபி நாயர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய பணியில் இருந்து விலக முடிவெடுத்து இருந்தார். 

இந்த நிலையில் தற்போது இந்த தகவலை விமான பயணத்தின் நடுவே பயணிகள் மற்றும் சக  ஊழியர்களிடம் அங்கிருந்த தொலைபேசி மூலமாக தெரிவித்தார். அப்போது கண்கலங்கிய சுரபி நாயர், தனக்கு இந்த அற்புதமான வாய்ப்பு அளித்ததற்காக நன்றி என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  இப்படி ஒரு நாள் வரும் என்று நான் நினைத்தது கூட இல்லை. இது என் இதயத்தின் ஒரு பகுதி போன்றது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இண்டிகோ நிறுவனம் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. இது வேலை செய்ய ஒரு அற்புதமான நிறுவனம். எனக்கு ஒரு அருமையான அனுபவம் தந்தது. இங்கிருந்து நான் போக விரும்பவில்லை என்றாலும் போக வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளோன் என எமோஷ்னல் ஆக கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

இந்த வீடியோவை அமெரிக்காவை சேர்ந்த பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியான அம்ருதா சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலரும் சுரபியின் கனிவான குணத்தையும், அவரது உழைக்கும் விதம் குறித்தும் பாராட்டிய நிலையில் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

இதற்கிடையில் இண்டிகோ விமானப்பெண் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பலரும் சுரபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News