வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வித வினோதமான விஷயங்களை நாம் காண்கிறோம். இவற்றில் மாணமக்களின் காதல், பாசம், கோவம், சண்டை, சலசலப்பு என அனைத்தும் காணப்படுகின்றது. இது தவிர திருமணத்திற்கு வருபவர்களின் சில கிண்டல் கேளிக்கைகளையும் காண முடிகின்றது. இப்படிப்பட்ட வீடியோக்களை ரசித்து பார்க்கும் இணையவாசிகள் பலர் உள்ளனர். 


இந்த திருமண வீடியோக்களில், வேடிக்கையான நிகழுகளுடன் பல அக்ரோஷமான விஷயங்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். இவற்றை பார்க்கும் பயனர்கள் இவற்றில் உள்ள வினோதமான விஷயங்கள் காரணமாக இவற்றை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.


மணமக்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், மாலை மாற்றும் சடங்கு முடிந்துவிட்டதையும் மணமகனும் மணமகளும் மணமேடயில் இருப்பதையும் காண முடிகின்றது. அவர்களின் அருகில் உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். திருமணம் நடந்துமுடிந்து விட்ட சந்தோஷத்தில் மணமகள் மேடையில் நடனமாடத் தொடங்குகிறார். ஆனால் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


மணமகனின் செயலால் அதிர்ச்சி 


பொதுவாக, திருமணங்களில், மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வார்கள். மேலும் இருவரது முகத்திலும் எப்போதும் ஒரு வித வெட்கத்தின் இழை இருக்கும். ஆனால் சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில், இவை இரண்டையுமே காண முடியவில்லை.


மேலும் படிக்க | இரையென நினைத்து டிரோன் கேமராவை தாவிப் பிடித்த முதலை: வைரல் வீடியோ


சிறிய கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் மணமகள் மேடையிலேயே நடனமாடுகிறார். இது அவரது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இதை புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால், மணமகனின் நடவடிக்கைதான் மிக வினோதமாக உள்ளது. மணமகள் தொடர்ந்து மணமகனைப் பார்த்துக்கோண்டே நடனமாடுகிறார், ஆனால் மணமகனோ மறுபுறம் திரும்பி அமர்ந்திருக்கிறார். மணப்பெண்ணை ஒருமுறை கூட அவர் பார்க்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மணப்பெண்ணின் நடனத்தை பார்த்து மகிழ்ந்ததாகத் தெரிகிறது. ஆனால், யார் பார்க்க வேண்டுமோ அவர் பார்க்கவில்லை. அவரது மனநிலை சரியாக இல்லை என தோன்றுகின்றது. மேலும் இந்த வீடியோவிற்கு மக்களும் பல வித  விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.


அந்த இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



மணமகளின் நடனம் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது butterfly_mahi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


ஒரு பயனர், ‘மாப்பிள்ளைக்கு என்ன கோபம்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். ‘பாவம் அந்த மணப்பெண்..இப்போதே பாராமுகமா’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ரோட்ல கால் நீட்டி படுத்த யானை - பஸ்ஸை நிறுத்திய டிரைவர்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ