ரோட்ல கால் நீட்டி படுத்த யானை - பஸ்ஸை நிறுத்திய டிரைவர்: வைரல் வீடியோ

மலைப்பாதையில் சென்ற பேருந்து முன்பு நின்ற யானை, திடீரென அப்படியே கீழே படுத்துக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2023, 09:12 PM IST
  • நடு ரோட்டில் படுத்த யானை
  • பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
ரோட்ல கால் நீட்டி படுத்த யானை - பஸ்ஸை நிறுத்திய டிரைவர்: வைரல் வீடியோ title=

யானையின் சேட்டைகளை காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்காவிட்டால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவை பாருங்கள். மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்த காட்டு யானை, அப்படியே நடு ரோட்டில் கிழே படுத்துக் கொண்டது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாக வைரலாகியுள்ளது. இணையத்தில் யானை தொடர்பான வீடியோக்கள் பல இருக்கின்றன. அதில் ரசிக்கத்தகுந்த வீடியோக்கள் எண்ணற்றவை. மனிதர்களைப் போலவே மிகவும் ஜாலியாகவும் காமெடியாகவும் இருக்கும் விலங்குகளில் யானையும் ஒன்று. 

மேலும் படிக்க | வாழைப்பழம் திருடி சாப்பிட்ட மாணவருக்கு வந்த சோதனை...! ரூ.1 கோடி முடிஞ்சு

கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மகிழ்ச்சியை தாராளமாகவும், கிண்டல் சேட்டைகளை அளவாகவும் வெளிப்படுத்தும். அந்த சமயத்தில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் என்றே கூறலாம். ஏனென்றால் மிகப்பெரிய உருவத்துடன் இருக்கும் யானை ஒன்று விளையாட்டு தனத்தில் ஈடுபடும்போது நிச்சயம் உங்கள் முகம் முழுவதும் புன்னகையைத் தவிர வேறு என்ன வரும். எவ்வளவு பெரிய இறுக்க மனதுடன் இருப்பவர்களும் யானையின் சேட்டைகளை பார்த்தால் வாய் விட்டு சிரித்துவிடுவார்கள். அதற்கு இந்த வீடியோவே சாட்சி என கூறலாம்.

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் பேருந்து ஒன்று மலைப்பாதையில் செல்கிறது. வளைவு பகுதி என்பதால் மிகவும் மெதுவாக செல்கிறது. திடீரென ராட்சத உருவம் கொண்ட யானை பேருந்துக்கு சற்று தொலைவில் வந்து நிற்கிறது. பேருந்து ஓட்டுநரும், அதற்குள் இருந்த பயணிகளுக்கும் செம ஷாக். யாரும் துளியும் எதிர்பார்க்கவில்லை யானை வரும் என்று. அந்த நேரத்தில் அனைவரும் யானை தங்களை தாக்கிவிடுமோ என்று தான் எண்ணியிருக்கிறார்கள். ஆனால், யானை கொஞ்சம் குசும்பாக நடந்து கொண்டது. என்ன செய்தது என்றால், பேருந்துக்கு சற்று தொலைவு முன்னால் நின்ற யானை திடீரென சாலையில் காலை நீட்டி படுத்துக் கொண்டது.

இது என்னடா? நமக்கு வந்த புது சோதனை என்று பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோர் எண்ணும் வகையில் சாலையை மறைத்து படுத்துக் கொண்டது. காண்பதற்கு அழகாக இருந்தாலும், அந்த பேருந்தில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்திருக்கும். @Lollubee என்ற டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | யானை வரையும் அழகான ’யானை’ ஓவியம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News