அண்ணன் தங்கை வைரல் வீடியோ: அண்ணன் தங்கை அன்பு மிகவும் விலைமதிப்பற்றது. இருவரும் மற்றவரின் மகிழ்ச்சிக்காக எப்போதும் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதுண்டு. சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம். அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள். தங்கள் அனைத்து கவலைகளுக்கும் சங்கடங்களுக்கும் அண்ணன் தீர்வாக இருப்பான் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். இந்த வைரல் வீடியோவிலும் அதுவே காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணன் தங்கை தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது பார்ப்பவர்களை உணர்ச்சிவசப் பட வைக்கிறது. வீடியோவில், இருவருக்கும் இடையே ஒரு அற்புதமான பிணைப்பை காண முடிகின்றது. இது மட்டுமின்றி, அண்ணன் தங்கையை பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வந்த விதம் காணத்தக்கது. இந்த வீடியோ இந்த நாளின் மிகச்சிறந்த வீடியோ என சமூக ஊடக பயனர்கள் கூறி வருகிறார்கள். 


மேலும் படிக்க | அண்ணாத்த படத்தை மிஞ்சிய அண்ணன் தங்கை பாசம்: மனதை உருக்கும் வைரல் வீடியோ 


சின்ன தங்கையை இப்படி காப்பாற்றினார்


இந்த வீடியோவில் ஒரு அண்ணனும் தங்கையும் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி மழை நீரில் சிக்கி தவிப்பதை காண முடிகின்றது. இதற்கிடையில் தங்கை மழையில் நனைகிறாரே என்ற கவலை அண்ணனை பாடாய் படுத்துகிறது. தங்கையை நனையாமல் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, தங்கையை தோளில் தூக்கிக்கொண்டு சிறுவன் சாலையைக் கடக்கிறான். 


அண்ணன் தங்கை பாசத்தின் வீடியோவை இங்கே காணலாம்: 



இக்காட்சியைப் பார்த்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டனர்


இந்த வீடியோவில் காணப்படும் காட்சியை பார்த்து அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர். இந்த வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை அழகாய் காட்டியுள்ள இந்த வீடியோ இணையவாசிகளின் இதயத்தை இளக வைத்துள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றனர்.


‘இதுதான் ரீல் ஆஃப் தி டே’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ’ இதைப் பார்த்ததும் எனக்கு என் தங்கையின் நினைவு வருகிறது’ என ஒருவர் எழுதியுள்ளார். இன்னும் பலர் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | சரக்கடித்த சேவல், கம்பனி கொடுத்த கோழி: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ