குரங்கையே யோசிக்க வைத்த குசும்புக்கார கில்லாடிகள்

சேட்டையில் குரங்கையே யோசிக்க வைத்த குசும்புக்கார கில்லாடிகளின் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 11:34 PM IST
  • குரங்குபோல் சேட்டை செய்யும் இளைஞர்கள்
  • வியந்து பார்க்கும் குரங்குகள்
  • இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோ
குரங்கையே யோசிக்க வைத்த குசும்புக்கார கில்லாடிகள் title=

குரங்குகள் சேட்டைக்கு அளவே இருக்காது. அதனை அனுபவித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். கோயிலுக்குபோகும்போது அல்லது மலைப் பிரதேசங்களில் சுற்றுலா செல்லும்போது அவற்றின் இம்சைகளை அனுபவித்தவர்கள் ஏராளமானபேர் இருக்கின்றனர். அதேநேரத்தில் சில சமயங்களில் அவை செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் ரசிக்கும்படியாகவும் இருக்கும். நொடிப்பொழுதில் ஒரு மரத்தின் கிளைப் பிடித்து தாவி தாவிச் சென்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மரத்தின் உச்சிக்கு சென்றுவிடும். பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

மேலும் படிக்க | அட பாவமே.. போஸ்டரை ஐஸ்கிரீம் என நினைத்து ருசித்த நாய்!

ஒரு சுவரில் இருந்து இன்னொரு சுவருக்கு அநாயசமாக தாவிச் செல்லும். எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழ நேர்ந்தாலும், பாதியில் ஏதோ ஒரு கிளையை சமயோசித்தமாக பிடித்து விபத்தில் இருந்து தப்பிக்கவும் செய்யும். அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் முக பாவனைகளில் ஆயிரம் செய்கைகளை செய்துவிடும். இதுவே குரங்கின் சேட்டைகளுக்கு அடையாளமாக கூறப்படுவதுண்டு. ஆனால், இதனை விஞ்சும் அளவுக்கு ஒரு சில சமயங்களில் குசும்புக்கார மனிதர்களும் சேட்டை செய்வார்கள். அப்படியான ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், வெள்ளப்பெருக்கில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கரையோரத்தில் மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறது. அந்த ஆலமரத்தின் கிளையைப் பிடித்து தொங்கி விளையாடும் இளைஞர்கள், ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு, அதாவது ஆற்றுக்குள் இருக்கும் கிளைக்கு தாவிக் குதிக்கிறார்கள். அவர்கள் அப்படி குதித்து விளையாடுவதை, கரையில் இருக்கும் குரங்குகள் நமக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே என நினைப்பதுபோல் வீடியோவை எடிட் செய்திருக்கிறார்கள். பகிரப்பட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | உலகிலேயே மிகவும் ஆபத்தான 5 நாய்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News