வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வேடிக்கையான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர், சமீபத்தில் அவர் தற்போதைய அதிபர் ஜோ பிடன் பற்றி சொன்ன கருத்து சர்வதேச அளவில் வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை குத்துச்சண்டை போட்டியில் சுலபமாக வீழ்த்துவேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப் இவ்வாறு கலாய்த்திருப்பது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.  


வரவிருக்கும் குத்துச்சண்டை போட்டிக்கான சண்டைக்கு முந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமெரிக்க அதிபரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குத் தான் டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார். யாருடனாவது குத்துச்சண்டை போட நேரிட்டால் யாருடன் சண்டை போடுவீர்கள் என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.


அதற்கு தயங்காமல் உடனடியாக பதிலளித்த முன்னாள் அமெரிக்க அதிபர், குத்துச்சண்டை போட்டியில் அதிபர் ஜோ பிடெனை சுலபமாக ஒருசில நொடிகளில் வீழ்த்திவிடுவேன் என்று சொன்னார். இந்த பதில் தான் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது.



"நான் குத்துச்சண்டை போட்டியில் மோத யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், தொழில்முறை குத்துச்சண்டை வீரரை எடுக்க மாட்டேன். அநேகமாக ஜோ பிடனை சுலபமாக தோற்கடித்துவிடுவேன். மிகவும் துரிதமாக ஏன் ஒரு சில வினாடிகளில் பிடென் வீழ்ந்துவிடுவார் என்று நினைக்கிறேன்” என ட்ரம்ப் வீடியோ கான்பிரன்ஸ் பேட்டியின்போது தெரிவித்தார். 


இந்த கேள்வி-பதில் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


முன்னாள் அதிபரின் இந்த பதில், டிவிட்டர் பயனர்களிடையே ட்விட்டெராட்டி (Twitterati) நக்கல், நையாண்டி மட்டுமல்ல எண்ணற்ற மீம்ஸையும் பகிரச் செய்துள்ளது. உண்மையில் முன்னாளுக்கும், இந்நாளுக்கும் இடையில் குத்துச்சண்டை நடைபெற்றால் வேடிக்கையாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.  



டிரம்பை கேலி செய்த ஒரு பயனர், "டிரம்ப் எங்களிடம் இருந்த வேடிக்கையான ஒன் லைனர் ஜனாதிபதி என்று நான் நம்புகிறேன ...". 


சனிக்கிழமை புளோரிடாவின் ஹாலிவுட்டில் உள்ள செமினோல் ஹார்ட் ராக் கேசினோவில் ஹெவிவெயிட் சாம்பியன்கள் எவாண்டர் ஹோலிஃபீல்ட் மற்றும் விட்டர் பெல்போர்ட் இடையேயான குத்துச்சண்டை போட்டிக்கு டிரம்ப் ரிங்சைட் வர்ணனை வழங்க உள்ளார் என்பதன் பின்னணியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த உரையாடல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR