வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


அந்த வகையில், விலங்கு பிரியர்களுக்கு தற்போது மற்றொரு விருந்து கிடைத்துள்ளது. விலங்குகளின் மிகவும் சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் பூனை ஒன்று ஒரு நாயை பாடாய் படுத்துவதை காண முடிகின்றது. இது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


பொதுவாக நாய்களும் பூனைகளும் அதிக அளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. பல வீடுகளில் இவை ஒற்றுமையுடன் இருப்பதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். எனினும், பெரும்பாலான இடங்களில் நாயும் பூனையும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால், இந்த வீடியோ சற்றி வித்தியாசமாக உள்ளது. 


நாய்கள் பூனை மீது ஆதிக்கம் செலுத்திதான் நாம் பெரும்பாலும் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த வீடியோவில் பூனை நாயை படுத்தி எடுக்கிறது. வீடியோவின் துவக்கத்தில் நாய் ஒன்று அமைதியாக படுத்திருப்பதை காண முடிகின்றது. ஆனால் தொடீரென் அங்கு வந்த பூனை அந்த நாயை விரட்டி விரட்டி அடிக்கின்றது. மிக ஆக்ரோஷமாக நாயை குரங்கு தாக்குவதை காண அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.


மேலும் படிக்க | குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ


கண்களால் நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்: