பெரும்பாலும் இணையத்தில் நாம் பார்த்த வீடியோக்களில் பூனைக்குட்டிகள் அதன் உரிமையாளரிடம் குழந்தைகளை போல பாசமாக கட்டிபுரளும் வீடியோக்களை தான் பார்த்திருப்போம், அதேபோல அதன் உரிமையாளரும் பூனையை பாசமாக அரவணைத்து கொள்வார்.  ஆனால் இங்கு வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனைக்குட்டியிடம் அதன் உரிமையாளர் கைகளால் குங்ஃபூ ஸ்டைலில் சண்டை போடுகிறார்.  இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.  அதிகப்படியான விலங்குகளின் அற்புதமான வீடியோக்கள் பெரும்பாலும் ட்விட்டர் பக்கத்தில் தான் பகிரப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர் 


அந்த வகையில் தற்போது இந்த காட்சியும் ட்விட்டரில், வீடியோஸ் ப்ரெசீடிங் லெஜெண்ட்ரீ ஈவண்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், பூனைக்குட்டி ஒன்று சுவற்றின் ஓரமாக அமைதியாக அமர்ந்து இருக்கிறது, அப்போது அதனருகில் உரிமையாளர் சென்று தன் கைகளை வைத்து குங்ஃபூ ஸ்டைலில் பூனையை சீண்டி சண்டை போட முயற்சிக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த பூனையும் அவரை தாக்க தொடங்கியது.  இப்படியாக இருவரும் பொழுபோக்காக சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.


 



இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்துள்ளன.


மேலும் படிக்க | திடீரென கூச்சலிட்ட மணமகள்: அப்படி என்னத்ததான் பார்த்தாங்க? வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR