சமீபகாலமாக இணையத்தில் பகிரப்படும் நாய் மற்றும் பூனைகளின் வீடியோக்கள் ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து வைரலாகி வருகிறது.  மற்ற விலங்குகள் செய்யும் குறும்புகளை காட்டிலும் நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டு வளர்ப்பு பிராணிகளும் செய்யும் செயல்கள் அனைத்தும் விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகின்றன.  மனிதர்கள் தங்களது உடல் வலியை அல்லது சோர்வை நீக்க மசாஜ் செய்வது நமக்கு தெரியும், ஆனால் விலங்குகளுக்கு மசாஜ் செய்வது பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இங்கு வைரலாகி வரும் வீடியோவில் நாய்க்கு பூனை மசாஜ் செய்துவிடுகிறது, அந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  Viral Video: மெட்ரோ ரயில் நிலையத்தில் யோகா பயிற்சி! அசத்தும் CISF நாய்!


நாய்க்கு பூனை மசாஜ் செய்வது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் நாய்க்கு பூனை மசாஜ் செய்வது அல்லது பூனைக்கு நாய் மசாஜ் செய்வது என பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.  இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் நாய் ஒன்று தரையில் அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது, அதன் அருகில் சில கோழிகள் மேய்ந்துகொண்டு இருக்கின்றது.  அப்போது ஒரு பூனை ஒன்று வந்து படுத்திருக்கும் நாய்க்கு இதமளிக்கும் வகையில் மசாஜ் செய்து விடுகிறது.  அந்த நாயும் பூனையின் மசாஜில் மயங்கி சொகுசாக படுத்துக்கொண்டு இருக்கின்றது.



நாயும், பூனையும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் வைரலானதை போலவே இந்த வீடியோவில் வைரலாகி இருக்கிறது.  இந்த வீடியோ பல ஆயிரம் பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | Viral Video : திருநெல்வேலிக்கே அல்வாவா... கிரைம் நிருபரின் Earpod-ஐ ஆட்டை போட்ட கில்லாடி கிளி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ