Viral Video : திருநெல்வேலிக்கே அல்வாவா... கிரைம் நிருபரின் Earpod-ஐ ஆட்டை போட்ட கில்லாடி கிளி!

நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து ஒரு பத்திரிகையாளர் ரிப்போர்ட் செய்து கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த ஒரு கிளி ஒன்று நிருபரின் இயர்பாட்  கவ்விக் கொண்டு பறக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 7, 2022, 05:45 PM IST
  • காணொளியை பார்த்து யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
  • சிலியின் சாண்டியாகோவில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • வீடியோவில் உள்ள நிருபர் ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறார்.
Viral Video : திருநெல்வேலிக்கே அல்வாவா... கிரைம் நிருபரின் Earpod-ஐ ஆட்டை போட்ட கில்லாடி கிளி! title=

சமீபத்திய ட்ரெண்டிங் வீடியோ: நேரலையாக பத்திரிக்கையாளர்கள் ரிப்போர்டிங் போது பல வினோதமான  சம்பவங்கள் பல முறை நிகழ்ந்து நீங்கள் பார்த்திருக்க கூடும். ஆனால், இது முற்றிலும் வேறுபட்டது. அந்த மிக வேடிக்கையான தருணத்தை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ரிப்போர்டரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய அந்த நிகழ்வு உங்களை நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். 

வைரலாகும் இந்த வீடியோ சிலியில் இருந்து எடுக்கப்பட்டது. அங்கே சாண்டியாகோவில், ஒரு பத்திரிகையாளர் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் மோசமான பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி  தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது என்கிருந்தோ அங்கு வந்த கிளி அங்கு வந்து நிருபரின்  நிருபரின் இயர்பாட்  கவ்விக் கொண்டு பறக்கிறது. இந்த சம்பவத்தை லைவ் ரிப்போர்ட் செய்ததால் கேமராவில் பதிவாகி, லட்சக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர். தற்போது அதன் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

தோளில் வந்து அமர்ந்த கிளி

சிலியின் சாண்டியாகோவில் குற்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு கொள்ளை, வழிப்பறி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 'சிலிவிஷன்' என்ற செய்தி சேனலின் நிகோலஸ் க்ரம், இந்த அதிகரித்து வரும் குற்றத்தைப் பற்றி தகவல்களை அளித்துக் கொண்டிருந்தார். அவர் நேரலையில் இருந் அந்த நேரத்தில் ஒரு கிளி வந்து அவரது தோளில் அமர்ந்தது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், கிளி அவரது இயர்பாடை காதில் இருந்து எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

இந்த காணொளியை பார்த்து யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த வீடியோவில் கிளி இயர்பாடை காதில் இருந்து எடுத்துக் கொண்டு பறக்கும் விதம் வியக்க வைக்கிறது. இருப்பினும், இயர்பாட் சிறிது தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

மக்கள் மிக அதிக அளவில் பகிர்ந்தும் கருத்தும் தெரிவித்தும் வருகின்றனர்

நிச்சயமாக, இந்த வீடியோவில் உள்ள நிருபர் ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறார், மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் வீடியோவில் அவர்கள் பார்ப்பது அவர்களை மிகவும் சிரிக்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை. அதனால்தான் மக்கள் அதை மிகவும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பற்றி வேடிக்கையாகக் கருத்து தெரிவிப்பவர்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு பயனர் எழுதினார், 'நேரடி குற்ற நிகழ்வுகள் குறித்த அறிக்கையின் போது, ​​குற்றம் நிருபரிடமே நடந்தது. அவர் பாதிக்கப்பட்டார், ஒரு கொடிய குற்றவாளி அவரைத் தாக்கியுள்ளார்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை!

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News