இசையமைப்பாளராக மாறிய பூனை! இணையத்தை கலக்கிய வீடியோ!
பூனை ஒன்று கிட்டார் இசைக்கருவியை வாசிக்க முயலும் காட்சி இணையத்தில் பலரின் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி வருகிறது.
வளர்ப்பு பிராணிகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் வெகு விரைவாக இணையவாசிகளை கவர்ந்து விடுகிறது. தற்போது ஒரு பூனையின் அரிய செயல் ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. பொதுவாக பூனைகள் அதிக அன்பை வெளிப்படுத்தும் வளர்ப்பு பிராணியாக கருதப்படுகிறது, இவை அதனை வளர்ப்பவர்களிடம் மிகுந்த பாசத்துடன் இருக்கும். எகிப்தில் பூனைகளை தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர், பழங்காலத்தில் அரசர்களுக்கு பிரமிடுகளை அமைப்பது போன்று, பூனைகளுக்கு பிரமிடு அமைத்துள்ளனர். அதோடு பூனைகள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும் திறனை கொண்டுள்ளது. அதிகளவில் பூனைகளின் குறும்புகள் இணையத்தில் பரவி வருகிறது, அந்த வகையில் பூனை இசைக்கருவியை பயன்படுத்தி இசைக்கும் காட்சி இதயத்தை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் படிக்க | வா மோதி பாத்தரலாம்..! பாம்பை ஓட விட்ட கீரி!
பூனையின் இந்த திறமையானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மெத்தையின் மீது வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்த பூனை ஒன்று அதன் மடியில் கிட்டார் இசைக்கருவியை வைத்திருப்பதை காண முடிகிறது. பின்னர் அந்த பூனை கிட்டாரில் பொருத்தப்பட்டுள்ள கம்பியை தனது வாயால் தட்டுகிறது, அப்போது அந்த இசைக்கருவியை இருந்து ஒலி வருகிறது. அதனையடுத்து அந்த பூனை நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு கீபோர்டு வாசிப்பது போல தனது இரு கைகளாலும் கிட்டாரில் உள்ள கம்பிகளில் இசை மீட்டுகிறது, ஒவ்வொரு தடவை கம்பியை தொடும்போதும் வெவெவேறு விதமான ஒலி கேட்கிறது. இந்த காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.
இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை முப்பத்தி ரெண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவுடன் க்ரியேட்டிங் எ மாஸ்டர்பீஸ் என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அருமையாக உள்ளது, எவ்வளவு திறமையான பூனை என்றவாறு பல கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பதைபதைக்கும் நிமிடங்கள்! கடலுக்குள் பெண்ணை கவ்வியிழுத்த கடல் சிங்கம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR