CCTV காட்சி: சிவனுக்கு பூஜை செய்யும்போதே உயிரிழந்த பூசாரி!!
புகழ்பெற்ற சிவன் கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும்போதே அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது!
புகழ்பெற்ற சிவன் கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும்போதே அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பீமாவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் என்ற சிவன் கோவிலில் வெங்கட ராமாராவ் என்பவர் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கோவிலில் அதிகாலை பூஜை செய்வது வழக்கம்.
இவர் வழக்கம்போல் கடந்த ஜூன் 11 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் கோவில் நடையை திறந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்துள்ளார். அப்போது திடீர் என்று அவர் சிவலிங்கத்தின் மீது மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அர்ச்சகர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் வலியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகயுள்ள காட்சியை பரிசோதித்துள்ளார். அதில், அர்ச்சகர் காந்த்குரி வேங்கட ராம ராவ் சுமார் 75 வயதுடைய அர்ச்சகர். இவர் காலையில் சிவலிங்கத்துக்கு காலை பூஜையில் ஈடுபட்டுள்ளார். பூஜையின் போது அவர் திடீர் என சிவலிங்கத்தின் அடியில் விழுந்துள்ளார். இதை கண்ட சக சர்ச்சகர்கள் இவரை தூக்கி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அனால், மருத்துவமனையில் மருத்துவர் கூறிய போது இவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.