பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் குறித்த விடியோக்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, குட்டி விலங்குகள் தன் தாயுடனோ அல்லது பிற விலங்குகளுடனோ விளையாடி சேட்டைகள் செய்யும் வீடியோக்கள் வைரல் ஆவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிம்பான்சி ஒன்று இரண்டு சிங்க குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிக நபர்களால் விரும்பப்பட்டு வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  தலைக்கேறிய போதை.. கல்யாண வீட்டில் நடந்த காமெடி சம்பவம்: வீடியோ வைரல்


அந்த வீடியோவில், பெண் சிம்பன்சி ஒன்று தனது இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. அப்போது ஒரு சிங்கக் குட்டி அதன் அருகே வந்து அதனை கொஞ்சியவாறு விளையாட தொடங்குகிறது. சிம்பன்சியும் அதன் மீது அன்பைப் பொழிகிறது, இருவரும் விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு சிங்கக் குட்டியும் சிம்பன்சி அருகில் வந்து கொஞ்ச துவங்க, மூவரும் விளையாடத் தொடங்குகிறார்கள்.



இந்த வீடியோவானது அளவிலும் சரி , பார்ப்பதிலும் சரி சிறியதாக தோன்றினாலும், இவ்வுலகில் அன்பு என்கின்ற உன்னதமான விஷயம் இனங்களை கடந்து விலங்குகள் இடத்திலும் கொட்டி கிடப்பதை பார்க்கும் போது புதுவித உணர்வை கொடுப்பதினால், பலரும் இந்த வீடியோவை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில், Instagram இல் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 38 லட்சத்திற்க்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்து, தற்போதும் பலர் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | 'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ