தலைக்கேறிய போதை.. கல்யாண வீட்டில் நடந்த காமெடி சம்பவம்: வீடியோ வைரல்

Drunk Man Viral Video: கல்யாண வீட்டில் ஒருவர் குடித்துவிட்டு செய்யும் லூட்டியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவை பார்த்தால் நீங்களும் சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்படுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 5, 2023, 03:54 PM IST
  • மொபைலை பாக்கெட்டில் வைக்க அவர் முயற்சிப்பதையும் நீங்கள் காணலாம்.
  • கல்யாண வீட்டில் போதை ஆசாமி செய்யும் லூட்டி.
தலைக்கேறிய போதை.. கல்யாண வீட்டில் நடந்த காமெடி சம்பவம்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

திருமணம் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வித வினோதமான விஷயங்களை நாம் காண்கிறோம். இவற்றில் மாணமக்களின் காதல், பாசம், கோவம், சண்டை, சலசலப்பு என அனைத்தும் காணப்படுகின்றது. இது தவிர திருமணத்திற்கு வருபவர்களின் சில கிண்டல் கேளிக்கைகளையும் காண முடிகின்றது. இப்படிப்பட்ட வீடியோக்களை ரசித்து பார்க்கும் இணையவாசிகள் பலர் உள்ளனர். இந்த திருமண வீடியோக்களில், வேடிக்கையான நிகழுகளுடன் பல அக்ரோஷமான விஷயங்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். இவற்றை பார்க்கும் பயனர்கள் இவற்றில் உள்ள வினோதமான விஷயங்கள் காரணமாக இவற்றை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: குறட்டை விடும் ஹம்மிங் பறவை... காணக் கிடைக்காத வீடியோ!

இந்த 27 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது கையில் மொபைலை வைத்திருப்பதை நீங்கள் காணலாம், மற்றொரு கையில் உணவு நிறைய தட்டு உள்ளது. மொபைலை பாக்கெட்டில் வைக்க அவர் முயற்சிப்பதையும் நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். ஆனால் அந்த மொபைல் பாக்கெட்டிற்குள் வைப்பதற்கு பதிலாக கீழே விழுது விடுகிறது. அப்புறம் என்ன... அந்த நபர் மொபைலை எடுக்க முயலும் போது நடக்கும் சம்பவம் தான் உங்களை சிரிக்க வைக்கச் செய்யும்.

கல்யாண வீட்டில் போதை ஆசாமி செய்யும் லூட்டி வீடியோவை இங்கே காணுங்கள்:

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது GaurangBhardwa1 என்ற டிவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

ஒரு பயனர், ‘திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் இதுபோன்ற காட்சிகள் சகஜம்’ என கேள்வி எழுப்பியுள்ளார். ‘வீடியோவைப் பார்த்து சிரிப்பதை நிறுத்த முடியவில்லை’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | 'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News