ஜமைக்காவிற்கு கொரொனா தடுப்பூசி; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் Chris Gayle
ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ள 14வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடருக்காக இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஏராளமான வீரர்களில் கெய்ல் மற்றும் ரஸ்ஸல் ஆகிய இருவரும் அடங்குவர்.
ஜமைக்காவிற்கு கோவிட் -19 தடுப்பூசியை நன்கொடையாக வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டார் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தார். ஜமைக்காவிற்கு 5,00,000 டோஸ் அஸ்ட்ராஜெனெகா ( AstraZeneca) தடுப்பூசியை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
கெய்ல் மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸின் இன்னொரு கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலும் (Andre Russell) நன்கொடை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.
"பிரதமர் மோடி (PM Narendra Modi) மற்றும் இந்திய தூதரகத்திற்கு மிகப்பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகள் கிடைத்ததால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். ஜமைக்கா மக்கள் இதை மிகவும் பாராட்டுகிறார்கள் இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள் " என ரஸ்ஸல் கூறினார். அந்த வீடியோவை ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ள 14வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடருக்காக இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஏராளமான வீரர்களில் கெய்ல் மற்றும் ரஸ்ஸல் ஆகிய இருவரும் அடங்குவர்.
ஐபிஎல் 2021 போட்டிகளில் கெய்ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ல் (Chris Gayle) விளையாடும் அதே நேரத்தில், ரஸ்ஸல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவார்.
ALSO READ | Zomato case:ஹிதேஷா சந்திரனி தப்பி ஓடியதன் காரணம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR