பெங்களூரு: சோமாடோவின் (Zomato) டெலிவரி பாய் காமராஜ் தன்னை குத்தியதாக குற்றம் சாட்டிய, பெங்களூருவை சேர்ந்த ஹிதேஷா சந்திரனி (Hitesha Chandranee), தான் மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து தளங்களிலும் ஆன்லைனில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
காவல் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக தான் பெங்களூரை (Bangalore) விட்டு வெளியேறினேன் என்ற செய்திகளையும் அவர் மறுத்தார்.
"இந்த சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து, என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் சொல்வது அனைத்தும் திரித்து கூறப்படுவதால், நான் மவுனமாக இருக்கிறேன். என்னை ஆதரிக்க எந்த PR நிறுவனமும் இல்லை. இந்த சம்பவம் காரணமாக என் மூக்கு எலும்பு முறிந்த மூக்கிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். என்னை தொலைபேசியில் மிரட்டுகின்றனர். என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர். எனது குடும்பத்தினரை தாக்குவதாக அச்சுறுத்துகின்றனர் , சமூக ஊடக (Social Media) தளங்களிலும் என் மீது தாக்குதல் நடக்கிறது" என அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
புகாரை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுக்க சமூக ஊடகங்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஹிதேஷா சந்திரனி மேலும் கூறினார்.
தாமதமாக லெலிவரி செய்ததால், ஆர்டர் செய்த உணவை திரும்ப எடுத்து செல்ல தான் கூறியதை அடுத்து ஜொமாடோ டெலிவரி பாய் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டிய ஹிடேஷா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த குற்ற சாட்டை மறுத்த ஜொமாடோ டெலிவரி எக்ஸிகியூட்டிவ், தன்னை ஹிதேஷா தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டு, செருப்பால் அடித்ததாகவும், அதனை தடுக்க முற்பட்ட போது, அவரது மூக்கில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
டெலிவரி பாய் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 355 (தாக்குதல்), 504 (அவமதிப்பு) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சந்திரனிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
ALSO READ | ஆன்லைன் மோசடிக்கு வங்கிகள் பொறுப்பல்ல: நுகர்வோர் நீதிமன்றம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR