Freezing Train: இது பொம்மை ரயில் அல்ல! வெண்பனி சூழ்ந்த காஷ்மீர் ரயில்
விண்ணில் உள்ள சொர்க்கம், மண்ணில் வந்ததோ என்று பிரமிக்க வைக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியான பனி ரயில் வீடியோ...
ரயில் பயணங்கள் என்றுமே இனிமையானவை, கண்ணுக்கு விருந்தளிப்பவை. ஆனால், பயணிக்கும் ரயிலை பார்ப்பதே கண்ணுக்கு விருந்து என்ற புது விஷயத்தை சொல்லும் ரயில் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
காஷ்மீரின் பாரமுல்லா ரயில் நிலையத்திற்குள் நுழையும் பனி மூடிய ரயில் (Snow Rail) ஆச்சரியத்தைத் தருகிறது. இது குளிர்காலத்தின் இயற்கையின் பனி விளையாட்டு. பாரமுல்லா ஸ்டேஷனுக்குள் பனியாடை அணிந்து நுழையும் ரயில் வைரலாகிறது.
பாரமுல்லாவிலிருந்து பனிஹால் வரையிலான பயணம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிக அழகான நிலப்பரப்புகளில் சிலவற்றைக் கடந்து செல்கிறது, பனியால் மூடப்பட்ட மலைகள் முதல் காற்றில் மெதுவாக அசையும் குளிர்காலத்தில் வெண்பனி மரங்கள் என இயற்கை எழில்சூழ் இடங்களில் பயணித்து வருகிறது இந்த ரயில்.
இந்த வீடியோவை இந்தியன் ரயில்ல்வே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது:
பிரமிக்க வைக்கும் காணொளி (Viral Video) என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ரயில் வீடியோ, பனிஹாலில் ரயில் நிலையத்திற்குள் நுழைவதைப் பார்ப்பதற்குக் விண்ணில் உள்ள சொர்க்கம், மண்ணில் வந்ததோ என்று தோன்றுகிறது.
காஷ்மீரின் பாரமுல்லா ரயில் நிலையத்திற்குள் நுழையும் பனி மூடிய ரயில் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.
ALSO READ | வெண்பனி மலையில் இந்திய ராணுவத்தினரின் டான்ஸ்!
ஜம்மு காஷ்மீரில் உச்சகட்டமான தற்போதைய குளிர்காலத்தில் எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சனிக்கிழமையன்று எதிர்பாராத பனிப்பொழிவுக்கு பிறகு, பாரமுல்லாவிலிருந்து பனிஹாலுக்கு மூன்று மணிநேரம் சென்றது இந்த ரயில்.
பனிஹாலில் 10 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையில் ரயில் நுழைவதற்கு முன்பு ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிக அழகான நிலப்பரப்புகளை கடந்து செல்கிறது.
குளிர்காலத்தில் பிரதான நெடுஞ்சாலையைத் தடுக்கும் கடுமையான பனியின் காரணமாக மக்கள் ரயில் பயணத்தை வரவேற்கின்ரனர்.
ALSO READ | சீரியசான கேள்விக்கு சிறுவனின் சிரிக்க வைத்த பதில்! வைரல் வீடியோ!
குளிர்காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கை வெளியில் உள்ள உலகத்துடன் இணைக்கிறது ரயில் சேவை.
புத்தாண்டின் தொடக்கத்தில் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாரமுல்லா-பனிஹால் இடையிலான 136 கிமீ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
குல்மார்க் மற்றும் பஹல்காமில் தட்பம் மிகவும் வீழ்ச்சியடைந்ததால், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பூஜ்ஜியத்தைவிட மிகவும் குறைந்தது.
ALSO READ | குட்டி யானையை தூக்கி விடும் அம்மாவின் கரிசனம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR