இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் போன்ற ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் என்றாலே ஒவ்வொரு கட்சி சார்பிலும், ஒவ்வொரு இடங்களிலும் பிரச்சாரங்கள் அனல் பறக்கும். தற்போது கொரோனா பரவல் சமயம் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாட செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் சாதனமாக மீடியாக்கள் செல்படுவதால், இவ்வாறு நடக்கும் பிரச்சார நிகழ்வுகளை மீடியாக்கள் தவறாமல் மக்களுக்கு படம்பிடித்து காட்டுவது வழக்கமான ஒரு செயல்முறை ஆகும்.
ALSO READ | Python Viral Video: 'துண்டா; இல்லை மலைப்பாம்பா’; கொஞ்சம் மரியாதை இருக்கட்டும் சார்!
இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் கருத்துகளையும் நிருபர்கள் கேட்டறிவார்கள். அந்த வகையில் நிருபர் ஒருவர் பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு சிறுவனிடம் கேள்வியெழுப்பிய சம்பவம் ஒன்று நகைச்சுவையை ஏற்படுத்தியதோடு அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், நிருபர் ஒருவர் சிறுவர்கள் குழுமியிருக்கும் இடத்திற்கு சென்று ஒரு சிறுவனிடம் சாதாரண தொனியில் ஒரு கேள்வியை கேட்கிறார். அதாவது நீ வளர்ந்த பிறகு என்னவாக ஆக விரும்புகிறாய் ? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் சிறிதும் தயக்கம் காட்டாமல், துணிச்சலாக 'இப்போது நாங்கள் படிக்கவே இல்லை, அப்புறம் நாங்க என்னவா ஆகுறது? என்று கேட்டுவிட்டு பின்னர் நான் வளர்ந்த பிறகு வேலைக்கு செல்வேன், ஒரு வீட்டை கட்டி அங்கு குடியேறுவேன், நன்றாக சாப்பிடுவேன், திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் இருப்பேன், மேலும் அப்போது எனக்கு 2 அல்லது 3 குழந்தைகள் கூட இருக்கும்" என்று நகைச்சுவையான பதிலை அளித்தான், இதனை கேட்ட நிருபரும் சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
இந்த வீடியோ நிருபரை மட்டுமல்லாது பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரம் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்ததோடு பல நேர்மறையான கமெண்டுகளையும், சிரிப்பு எமோஜிகளையும் பெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR