TINDER ஆப் மூலம் தங்களின் துணையை தேடிக்கொள்ள பல இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அதில் ஒருசிலர் மட்டுமே உண்மையான விவரங்களை பகிர்ந்துகொள்கின்றனர். இந்த ஆப்பை ஜாலிக்காக பலரும் பயன்படுத்துகின்றனர். அப்படித்தான் ஜாலிக்காக பயன்படுத்தி உயிரையே விட்டுள்ளார் துஷ்யந்த் ஷர்மா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2018-ம் ஆண்டு டிண்டர் ஆப் மூலம் துன்யந்த் ஷர்மா பிரியா என்ற பெண்ணுடம் பேசத் தொடங்கியுள்ளார். திருமணம் ஆக துஷ்யந்த் ஷர்மா தன்னை பேச்சுலர் என்றும், தனது பெயர் விவான் கோலி என்றும் டெல்லியில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.



அதேபோல பிரியாவும் திஷாந்த் கம்ரா என்ற இளைஞருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இருவரும் இருவரும் பொய்களை அள்ளி வீசி நெருக்கமாக ஆப் மூலம் பழகி வந்துள்ளனர். பிரியாவும் துஷ்யந்த் ஷர்மா மிகப்பெரிய பணக்காரர் என்பதால் தொடர்ந்து அவருடன் பழகியுள்ளார். 


தனது காதலர் திஷாந்த் கம்ராவுக்கு கிட்டதட்ட 20 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. இதனால் துஷ்யந்த் ஷர்மாவை கடத்தி பணம் பார்க்க நினைத்துள்ளார் பிரியா. அதற்காக வாடகை வீடு ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்துக்கு பிரியாவின் காதலர் திஷாந்த் கம்ரா மற்றும் லக்‌ஷயா வாலியா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.



திட்டமிட்டபடி காதலியை காண வந்த துஷ்யந்த் ஷர்மா பிறகு தான் தன்னை திட்டமிட்டு அழைத்து வந்ததை கண்டுபிடித்தார். அதோடு துஷ்யந்த் ஷர்மாவின் அப்பாவுக்கு போன் செய்து பிரியா பணம் கேட்ட போது தான் அவர் தொழிலதிபர் இல்லை என்பதும், ஏற்கனகே திருமணம் ஆனவர் என்பதும் தெரியவந்துள்ளது. 


இதனால் கடுப்பான பிரியா உடனடியாக 10 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் துஷ்யந்த் ஷர்மாவை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார். ஆனால் துஷ்யந்த் ஷர்மா தந்தை அவ்வளவு பணம் இல்லை என்பதால் உறவினர்களிடம் மன்றாடி 3 லட்சம் ரூபாய் வரை திரட்டி அவர்கள் சொன்ன அகவுண்டுக்கு அனுப்பியுள்ளார். 


மேலும் படிக்க | குமரியில் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி! சிதைத்த வாலிபர்கள்! வீடியோ வெளியிட்டு மிரட்டல்!


ஆனால் துஷ்யந்த் ஷர்மாவை பிரியா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியால் குத்தியும், தலையணையால் அழுத்தியும் கொலை செய்துள்ளார். துஷ்யந்த் ஷர்மா தந்தை அளித்த புகாரில், பிரியாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். 


இதனையடுத்து இந்த வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் பிரியா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளும் குற்றவாளிகள் என்பது நிரூபனமானதால் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிண்டர் ஆப் மூலம் பொய்களை மட்டுமே சொல்லி பழகி அது கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ரவுடி பேபி மனைவியின் வெறித்தாக்குதல்! பாவப்பட்ட கணவர் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ